Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Friday, March 24, 2023
  • Home
  • Contact Us
  • DMCA Copyright Infringement Notification
  • Login/Register
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Copyright 2021 - All Right Reserved
Current Affairs

1st May 2020 Current Affairs in Tamil

by Firoz Umrah May 2, 2020
by Firoz Umrah May 2, 2020

1st May 2020 Current Affairs in Tamil

1st  May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

1st  May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

உலகம்

  1. கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவுக்கு அமெரிக்க அரசு ரூ.22.5 கோடி கூடுதலாக நிதியுதவி அறிவித்துள்ளது.  இதனால் மொத்தம் ரூ.44.25 கோடி நிதியுதவி அறிவிக்கப்பட்டு உள்ளது.
    • கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை மேற்கொள்ளும் இந்தியாவுக்கு இந்த கூடுதல் நிதியானது ஆதரவாக இருக்கும்.
    • அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வலிமையான மற்றும் உறுதியான நட்புறவுக்கு மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.

________________________________________________________________________

  1. ஆஸ்திரேலியாவில் சமூக இடைவெளியை பின்பற்றாத மந்திரி டிரேவர் வாட்ஸ் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் காவல்துறை மற்றும் பயங்கரவாத தடுப்பு இலாகாவின் நிழல் மந்திரியாக பதவி வகித்து வந்தவர் டிரேவர் வாட்ஸ். (பிரதான எதிர்க்கட்சி உறுப்பினருக்கு வழங்கப்படும் மந்திரி அந்தஸ்து நிழல் மந்திரி எனப்படும்) இவர், தேசிய விடுதலை கட்சியை சேர்ந்தவர்.

இந்தியா

  1. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை திடீரென ஜலசக்தி துறை அமைச்சகத்தின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

காவிரி நடுவர் மன்றம்
  • தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையே காவிரி நீரை பகிர்ந்துகொள்வது தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.
  • இந்த காவிரி நடுவர் மன்றம் தனது இறுதி தீர்ப்பை 2007-ம் ஆண்டு வழங்கியது.
 திர்பின் முக்கிய அம்சங்கள்
  • அந்த இறுதி தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைக்க உத்தரவிடப்பட்டது.
காலதமதம்
  • 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம்தான் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.
  • காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக்குழு ஆகிய அமைப்புகளை மத்திய அரசு அமைக்கவில்லை.
  • அதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம்கோர்ட்டு இந்த அமைப்புகளை 6 வார காலத்தில் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
  • அதன்பின்னர் அதே ஆண்டின் 2018 மே மாதம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.
  • இந்த ஆணையத்தின் முக்கிய கடமை, தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களிடையே காவிரி நீரை பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்படுகிறபோது தீர்வு காண வேண்டும் என்பதாகும்.
  • இந்த ஆணையத்தில் சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களின் பிரதிநிதிகளும், மத்திய அரசின் பிரதிநிதியும் உறுப்பினர்கள் ஆவர்.
  • இந்த ஆணையத்தின் கூட்டம் கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது.

________________________________________________________________________

2. தொழில் அதிபர்களின் ரூ.68 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம். 

  • பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி, மெகுல் சோக்சி, விஜய் மல்லையா உள்ளிட்ட 50 தொழில் அதிபர்கள் திருப்பி செலுத்தாத வங்கி கடன் ரூ.68 ஆயிரத்து 607 கோடி தொழில்நுட்ப ரீதியாகவும், விவேகமான நடவடிக்கையாகவும் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.
  • மத்திய அரசு எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை என்றும், இது கணக்கியல் ரீதியான நடவடிக்கைதான் என்றும், கடனை வசூலிக்கும் நடவடிக்கையை அரசு நிறுத்தாது என்றும், கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறி உள்ளார்.
டெக்னிக்கலி ரைட் ஆஃப்” அல்லது “கணக்கியல் ரீதியாக தள்ளுபடி
  • டெக்னிக்கலி ரைட் ஆஃப்” அல்லது “கணக்கியல் ரீதியாக தள்ளுபடி” என்பது வங்கியின் வரவு-செலவுக் கணக்கில் மேற்கொள்ளப்டும் செயலாகும்.
  • அதாவது ரிசர்வ் வங்கிக்கு அளிக்கும் கணக்கில் ஒரு வங்கி தனது வாராக்கடனை, செயல்படா சொத்துகளைத் தள்ளுபடி செய்ததாக கணக்கீடு ரீதியாகக் காண்பிக்கும்.
  • ஆனால், கடன் கொடுத்த வங்கிக் கிளையைப் பொறுத்தவரை இந்தக் கடன் தள்ளுபடி செய்யப்படாது.
  • கடன் வாங்கிய நபரிடம் இருந்து கடன் தொகையைப் பெறும் முயற்சி தொடர்ந்து நடக்கும்.
  • வங்கிகள் கடன்களைத் தொழில்நுட்ப ரீதியாகத் தள்ளுபடி செய்யலாம் மற்றும் வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாதவர்களுக்கு எதிராக மீட்டெடுப்புகள் தொடரலாம் என்ற விதியை ஒருவர் மறுக்க முடியாது.
எதிர்ப்புகள்
  • கணக்கியல் ரீதியாக கடன் தள்ளுபடி எனும் விதி மற்ற கடன்களைச் செலுத்தாமல் இருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தலாம்.
  • ஆனால், நாட்டைவிட்டுத் தப்பி ஓடியவர்களுக்கு எதிராக ஏன் பயன்படுத்தப்பட்டது?

________________________________________________________________________

3. மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் ‘ஆரோக்ய சேது’ மொபைல் செயலியை (ஆப்) உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது. 

அதன் உத்தரவில் மேலும் கூறப்பட்டு இருப்பதாவது:-

  • ஊழியர்கள், அலுவலகம் புறப்படும்போது ஆரோக்கிய சேது செயலியை பார்க்க வேண்டும். அதில், கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உணர்த்தும்வகையில், ‘பாதுகாப்பு’, ‘குறைந்த அபாயம்‘ என்று காட்டினால் மட்டும் அலுவலகத்துக்கு புறப்படுங்கள்.
  • ‘அதிக அபாயம்‘, ‘மிதமானது’ என்று காட்டினால், அலுவலகம் வரக்கூடாது.
  • 14 நாட்களோ அல்லது ‘பாதுகாப்பு’ என்று காட்டும்வரையோ தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இதை செயல்படுத்துவதை ஒவ்வொரு துறையிலும் உயர் அதிகாரி ஒருவர் கண்காணிக்க வேண்டும்.
  • மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மட்டுமே சுழற்சி முறையில் பணிக்கு வரவழைக்க வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

________________________________________________________________________

4. கொரோனா வைரஸ் பரவி வருகிற நிலையில், ஒவ்வொருவரும் வீடுகளில் உள்ள ஏ.சி. எந்திரங்களை 24 முதல் 30 டிகிரி என்ற அளவில் (இது இயல்பான குளிர்நிலையை மட்டும் தரும்) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அதேபோன்று ஈரப்பதத்தின் அளவையும் 40 முதல் 70 சதவீதத்துக்குள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

________________________________________________________________________

5. மராட்டிய மாநிலம் புனேயில் கண்டறியப்பட்ட ஆய்வு முடிவு, “சார்ஸ், மெர்ஸ் வைரஸ்களுக்கு பிறகு மிக மோசமான மூன்றாவது வைரஸ் கொரோனா வைரஸ்தான்.

இது மிகவும் சூடான மற்றும் ஈரப்பதமான வானிலையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதாகும்.

________________________________________________________________________

6. சென்னை ஐ ஏ எஸ் அதிகாரியும், தற்போது வெளியுறவுத்துறையில் பணியாற்றி வருபவருமான டி.எஸ். திருமூர்த்தி ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளராக பணியாற்றி வரும் திருமூர்த்தி, அனுபவமிக்க தூதர் சையத் அக்பருதீனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

ஐ ஏ எஸ் டி.எஸ். திருமூர்த்தி
  • 1962-ம் ஆண்டு மார்ச் 7-ம் தேதி சென்னையில் பிறந்தவரான திருமூர்த்தி, இளங்கலை வணிகவியல் பட்டம் பெற்று, சட்டம் பயின்றார். அதன்பின் ஐஏஎஸ் தேர்வில் 1985-ம் ஆண்டு தேர்ச்சி பெற்று வெளியுறவுத்துறையில் பணியாற்றினார்.
  • கெய்ரோ, ஜெனிவா, காசா, வாஷிங்டன், ஜகார்த்தா ஆகிய நகரங்களில் இந்திய தூதரகங்களில் முக்கியப் பொறுப்பில் பணியாற்றியுள்ளார்.
  • மேலும் வங்காள தேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு, மியான்மர் ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
  • பாலஸ்தீனம், மலேசியா, ஜகார்தாவில் இ்ந்தியத்தூதராகவும் திருமூர்த்தி பணியாற்றியுள்ளார்.
  • சிறந்த எழுத்தாளரான திருமூர்த்தி, கிஸ்ஸிங் தி ஹெவன் மானசரோவர் யாத்ரா, கிளைவ் அவென்யு, சென்னை வாசி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். 

________________________________________________________________________

7. மார்னிங் கன்சல்ட் தகவல்

அமெரிக்கா அடிப்படையிலான கணக்கெடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான மார்னிங் கன்சல்ட் தகவல் படி பிரதமர் மோடி செல்வாக்கு மதிப்பீடு ஜனவரி 7 அன்று 76 சதவீதமாக இருந்தது.

ஏப்ரல் 21 அன்று மதிப்பீடு 83 சதவீதமாக உயர்ந்து உள்ளது.

 ஐஏஎன்எஸ்-சிவோட்டர்  கொரோனா டிராக்கரும்

ஏப்ரல் 21 ஆம் தேதி நிலவரப்படி அவரது தலைமை மீதான நம்பிக்கை மார்ச் 25 அன்று 76.8 சதவீதத்திலிருந்து 93.5 சதவீதமாக உயர்ந்தது என்பதாக சுட்டிக்காட்டி உள்ளது.

  • இந்தியாவின் கொரோனா வைரஸ்போரட்டத்தில்   மோடி தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதோடு,
  • உலக நாடுகளின் தலைவராக தனது செல்வாக்கை உயர்த்தி கொண்டார்.
  • எதிர்க்கட்சிகள் கூட கொரோனா வைரஸ் விவகாரத்தில்கவனம் செலுத்துகின்றன.
  • மேலும் 130 கோடி மக்கள் வாழும் நாட்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் அவருக்கு  பாராட்டு கிடைத்து உள்ளது.

________________________________________________________________________

8. பிரபல இந்தி நடிகர் இர்பான்கான், ‘நியூரோஎண்டோகிரைன்’ என்ற அரியவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். 

  • தேசிய விருது – பான்சிங் தோமர் படம்.
  • பத்மஸ்ரீ விருது – திரையுலகில் சிறந்த பங்களிப்புக்காக             மத்திய அரசின் விருது.
  • ஆஸ்கர் விருது – தாராவியை மையமாக கொண்ட   ஸ்லம்டாக் மில்லினியர், லைப் ஆப் பை படங்கள் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
  • கடைசியாக அங்ரேசி மீடியம் என்ற படத்தில் நடித்து இருந்தார். 

________________________________________________________________________9. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தியது.

  • இதில் ஒரு நாளின் சராசரி வெப்பநிலை ஏற்றத்தாழ்வுக்கும் கரோனா வைரஸ் பரவலுக்கும் இடையே 85% வரை தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.
  • ஒரு நாளில் வெப்ப நிலை அதிகரிக்கும்போது கரோனா வைரஸ் தாக்கத்தின் அளவு குறைவதாகவும் வெப்பநிலை குறைந்தால் பாதிப்பு அதிகரிப்பதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

நாட்டில் உள்ள குறிப்பிட்ட சில நகரங்கள் மற்றும் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களில், ஒரு நாளில் சராசரி வெப்பநிலை அளவு 25 டிகிரி சென்டிகிரேடும் அதற்கு அதிகமாகவோ இருந்தால் இந்த இரு மாநிலங்களிலும் கரோனா வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளதாக ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானி ஹேமந்த் பெர்வானி தெரிவித்துள்ளார்.

________________________________________________________________________

10. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் பிளாஸ்மா சிகிச்சைக்கு அனுமதி வழங்கவில்லை: மத்திய சுகாதாரத் துறை விளக்கம்.

கரோனா வைரஸ் விவகாரத்தில் பிளாஸ்மா சிகிச்சை உட்பட எந்தவொரு சிகிச்சைக்கும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கவில்லை.

  • பிளாஸ்மா சிகிச்சை இப்போது ஆராய்ச்சி, சோதனை நிலையில் மட்டுமே உள்ளது.
  • சரியான முறையில் பிளாஸ்மா சிகிச்சைஅளிக்கவில்லை என்றால் நோயாளியின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம்.
  • கரோனா வைரஸ் காய்ச்சலை பிளாஸ்மா சிகிச்சைமுறை குணப்படுத்தும் என்பதற்கு இதுவரை ஆதாரம் இல்லை.
  • இந்த சிகிச்சை தொடர்பாக தேசிய அளவில் தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
பிளாஸ்மா தெரபி

பிளாஸ்மா தெரபி என்பது குணமடைந்த நபரிடம் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்மா மூலம் பாதிப்பு உள்ள இன்னொருவரின் உடலில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுவது தான்.

பிளாஸ்மா என்பது ரத்தத்தில் 55% தான் இருக்கும். அதிலும் 90 சதவீதம் நீர் இருக்கும். மீதமுள்ள 10%தான் நொதியூக்கிகள் (என்சைம்ஸ்), புரதம் மற்றும் உப்பு போன்றவை இருக்கும். தேவைப்படும் நோயாளிகளுக்கு நல்ல ஆரோக்கியமான பிளாஸ்மாக்களை மட்டுமே கொடுக்க முடியும். எடுக்கப்பட்ட 500 மில்லி லிட்டர் பிளாஸ்மாவிலிருந்து ஒரு நோயாளியைக் காப்பாற்ற முடியும்.

  • பிளாஸ்மா தெரபி என்பது மிகவும் எளிதான ஒரு முறை. கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு 2 முறை கொரோனா இல்லை என வர வேண்டும்.
  • பின்னர் அவர்களை வீட்டிற்கு அனுப்பி, 14 நாட்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்த அறிவுறுத்தப்படுவார்கள்.
  • அதன் பின் பிளாஸ்மா தானம் செய்ய வேண்டுமென்றால் ஆர்டி பிடிஆர் என்னும் சோதனைக்காக மருத்துவமனைக்கு அழைக்கப்படுவார்கள்.
  • அப்போதும் அதன் முடிவு கொரோனா இல்லை என வந்தால்தான் பிளாஸ்மா தானம் செய்ய முடியும் என அதை விவரிக்கிறார்.

________________________________________________________________________

11. சிறுபான்மையினர்-கல்வி-நிறுவனங்களுக்கும்-நீட் பொருந்தும்-உச்சநீதிமன்றம்-தீர்ப்பு.

    • 2016 இல் எம்பிபிஎஸ், பிடிஎஸ், எம்டிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்பில் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வை கட்டாயமாக்கும் அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.
      • தமிழகத்திற்கு அந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டது.
      • 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.
      • அரசு உதவி பெறாத சிறுபான்மையினர், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும். இத்தேர்வில் இருந்து அத்தகைய கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்க முடியாது’ என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

      உச்சநீதிமன்றம் விளக்கம்

      • இந்த விவகாரத்தில் சிறுபான்மையினர், தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமைகள் பறிக்கப்படவில்லை என்றும் நீதிபதி அமர்வு தெரிவித்தது.
      • கல்வி தரமாக இருக்க வேண்டும் என்பதில் சமரசத்துக்கு இடமில்லை.
      • கல்வி வியாபாரமாகிவிடக் கூடாது என்பதே நீட் தேர்வின் நோக்கமாக உள்ளது.
      • ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு பல்வேறு குறைபாடுகளையும் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டதாகவும் உள்ளது.
      • கல்வி வர்த்தகமயமாகுவதும், லாப நோக்கத்துடன் செயல்படுவதையும், சுரண்டப்படுவதையும் தடுக்கிறது.
      • மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதல் கட்டணம் பெற்றுக்கொண்டு தகுதியில்லாத மாணவர்களைச் சேர்ப்பதையும் இது தடுக்கிறது.

________________________________________________________________________

12. ஊரடங்குக்கு பிந்தைய காலத்தில் பின்பற்ற இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (ஏஏஐ) புதிய கட்டுப்பாடுகள்

இந்தியாவில் 23 சர்வதேச விமான நிலையங்கள் உள்பட 137 விமான நிலையங்கள் இந்திய விமான நிலையங்களின் ஆணைய கட்டுப்பாட்டில் வருகின்றன.

இந்த கட்டுப்பாடுகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் வருகிற சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, அவுரங்காபாத், பெல்காம், புதுச்சேரி, திருவனந்தபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படுகின்றன. இவற்றுக்கு இந்திய விமான நிலையங்களின் ஆணையத்தின் கட்டுப்பாடுகள் பொருந்தாது.

இந்த விமான நிலையங்களுக்கு விதிக்கப்படுகிற கட்டுப்பாடுகள் வருமாறு:-
  • ஒரு விமான நிலையத்தில் பல முனையங்கள் இருந்தாலும், ஊரடங்குக்கு பின்னர் ஒரு முனையம் மட்டுமே செயல்பட வேண்டும்.
  • ஒரு விமான நிலையத்தில் பயணிகள் வந்து இறங்குகிறபோது அவர்களது உடைமைகளை (பேக்கேஜ்) திரும்பி தருவதற்கான ‘பேக்கேஜ் கேரவ்சல்’ ஒன்றுக்கு மேல் இருந்தால், சமூக இடைவெளியை பின்பற்றுவதற்காக மாற்று ‘பேக்கேஜ் கேரவ்சல்’ பயன்படுத்தப்பட வேண்டும்.
  • விமானங்களின் சேவை படிப்படியாக அதிகரிக்கிற வரையில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சில்லரை விற்பனை கடைகள் இயங்கி அவை உணவு, குளிர்பானங்களை விற்றால் போதுமானது. ஆரம்ப கட்டத்தில் அவற்றில் டீ, காபி உள்ளிட்டவற்றை மட்டுமே விற்பனை செய்தால் போதும். சிற்றுண்டிகளை பாக்கெட்டில் விற்கலாம்.
  • நகர நிர்வாகம் அல்லது மாநில நிர்வாகம் அனுமதிக்கும் வரையில் விமான நிலைய பார்களிலும், உணவு விடுதிகளிலும் மதுபானங்களை அனுமதிக்க முடியாது.
  • பயணிகளுக்காகவும், விமான நிலைய ஊழியர்களுக்காகவும், விமான நிறுவனங்களின் ஊழியர்களுக்காகவும் பொதுபோக்குவரத்து சாதனங்கள், வாடகை கார்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்கு உள்ளூர் அரசு நிர்வாகத்துடன் விமான நிலையங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தீவிரமான தாக்குதலுக்கு ஆட்பட்ட ‘ஹாட்ஸ்பாட்’களில் இருந்து வருகிற விமானங்களுக்காக, விமான நிறுவனங்கள் தனியாக விமானம் நிறுத்தும் இடத்தையும், ‘பேக்கேஜ் பெல்ட்’டுகளையும் ஏற்படுத்தி தர வேண்டும்.
  • சமூக இடைவெளியை பின்பற்றத்தக்க அளவில் விமான நிலைய முனையங்களின் கொள்திறன் குறித்து டெல்லியில் உள்ள தலைமையகத்துக்கு தெரிவிக்க வேண்டும். அதை ஆய்வு செய்து, விமான நிலைய ‘ஸ்லாட்’டுகள் ஒதுக்கப்படும். இங்கு ‘ஸ்லாட்’ என்பது விமான நிலையத்துக்கு விமானம் வந்து சேருகிற அல்லது விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுகிற நேர அளவு ஆகும்.
  • விமான நிலையங்களில் இருக்கை வசதிகள் 1 முதல் 1½ மீட்டர் இடைவெளி விட்டு அமைக்கப்படுதல் வேண்டும்.
  • பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றுகிற வகையில், கழிவறை, எக்ஸ்ரே எந்திரம், கன்வேயர் பெல்ட்டுகள் ஆகியவற்றின் அருகே போதிய பணியாளர் நியமிக்கப்பட வேண்டும்.
  • கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்கள், தாக்கி இருக்கலாமோ என்ற சந்தேகத்துக்கு இடமானவர்கள் வருகிற போது அவர்களை தனிமைப்படுத்துவதற்கு ஒரு பகுதியை ஒதுக்கி வைத்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் வருகிறபோது ஒட்டுமொத்த விமான நிலையத்திலும் கிருமி நாசினி தெளிக்க வேண்டும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

________________________________________________________________________

தமிழ்நாடு

  1. சென்னையில் 98% நபர்களுக்கு அறிகுறிகள் இல்லாமல் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட  ரோபோவை, ‘ரோபோ தாட்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தினரின் பங்களிப்புடன் சென்னை காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.

________________________________________________________________________

  1. பிற நாடுகளில் இருந்து மாநிலம் திரும்ப விரும்புவோர்க்காக தமிழக அரசு தனி இணையதளம் nonresidenttamil.org ஒன்றைத் துவக்கியுள்ளது.

எனவே தற்போது தமிழகம் திரும்ப விரும்புபவர்கள் தங்களது விபரங்களை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். இதன்மூலம் எத்தனை பேர் ஊர் திரும்ப விரும்புகிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கான மற்ற ஏற்பாடுகளைத் திறம்பட செய்ய இயலும்.

________________________________________________________________________

  1. கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

  • தூத்துக்குடி மாவட்டத்தில் மானாவாரி முறையில் கோவில்பட்டி, விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம் பகுதிகளில் விவசாயம் நடைபெறுகிறது.
  • நவதானியங்கள், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் தரமான நிலக்கடலை, மண்டை வெல்லம் கிடைப்பதால் கடலை மிட்டாய் உற்பத்தியில் கோவில்பட்டி சிறப்பு பெற்று விளங்குகிறது.
  • தமிழகத்தில் காஞ்சிபுரம் பட்டு, விருப்பாச்சி வாழைப்பழம், கொடைக்கானல் மலைப்பூண்டு, ஈரோடு மஞ்சள், பழனி பஞ்சாமிர்தம் என 33 பொருள்களுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில், 34ஆவது பொருளாக கோவில்பட்டி கடலை மிட்டாய்க்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது.
  • புவிசார் குறியீடு தற்போது கிடைத்துள்ளதையடுத்து கடலை மிட்டாய்க்கு வெளிநாடுகளில் இருந்தும் ஆர்டர்கள் கிடைக்கும்.
  • வேலைவாய்ப்பு மேலும் பெருகும்.
இந்திய புவிசார் குறியீடு (Geographical indication)
  • ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும்.
  • இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும்.
  • இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
  • இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டது.
  • மத்திய அரசின் வணிக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிற்துறை மற்றும் உள் வர்த்தகத் துறை (Department for Promotion of Industry and Internal Trade – DPIIT) புதிதாக புவிசார் குறியீடு வழங்கப்பட்டிருக்கும் பொருட்களை பட்டியல் இட்டிருக்கிறது.

________________________________________________________________________

வர்த்தகம்

  1. முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 6.5 சதவீத பின்னடைவு
  • சென்ற மாா்ச் மாதத்தில் முக்கிய 8 துறைகள் உற்பத்தியில் 5 சதவீத பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • இத்துறைகளின் உற்பத்தி, கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்தில் 8 சதவீதம் அதிகரித்திருந்தது.
  • நிலக்கரி உற்பத்தி மட்டும் 9.1 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக குறைந்துள்ளது.
  • 2019-20 நிதியாண்டின் ஏப்ரல்-மாா்ச் காலகட்டத்தில் முக்கிய 8 துறைளின் உற்பத்தி 6 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.
  • இது, 2018-19இல் 4.4 சதவீதமாக இருந்தது என மத்திய அரசு புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
  1. நிலக்கரி
  2. கச்சா எண்ணெய்,
  3. இயற்கை எரிவாயு,
  4. சுத்திகரிப்பு பொருள்கள்,
  5. உரம்,
  6. உருக்கு,
  7. சிமெண்ட் மற்றும்
  8. மின்சாரம்
PDF Download Here
0 comment
0
FacebookTwitterPinterestEmail
Firoz Umrah

previous post
List of Most Popular Newspaper Names in the World
next post
2nd May 2020 Current Affairs in English

Related Posts

April 2022 Current Affairs PDF – Released by...

July 22, 2022

March 2022 Current Affairs PDF – Released by...

July 22, 2022

February 2022 Current Affairs PDF – Released by...

July 22, 2022

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – மே...

July 22, 2022

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – ஏப்ரல்...

July 22, 2022

தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – மார்ச்...

July 22, 2022

Leave a Comment Cancel Reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

Our Telegram Channel

Join us on Telegram

Related Posts

  • April 2022 Current Affairs PDF – Released by Tamil Nadu Government – English medium

    July 22, 2022
  • March 2022 Current Affairs PDF – Released by Tamil Nadu Government – English medium

    July 22, 2022
  • February 2022 Current Affairs PDF – Released by Tamil Nadu Government – English medium

    July 22, 2022
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – மே 2022- Tamil medium

    July 22, 2022
  • தமிழ்நாடு அரசு வெளியிட்ட நடப்பு நிகழ்வுகள் PDF – ஏப்ரல் 2022- Tamil medium

    July 22, 2022

Categories

  • (10th) SSLC (22)
  • Blog (40)
  • Books (44)
  • Current Affairs (95)
  • Dinamalar News Paper (45)
  • Dinamani News Paper (86)
  • Economy (25)
  • Employment News (148)
  • Environment (14)
  • Exams Answer key (5)
  • General English (87)
  • General Studies (72)
  • General Tamil (15)
  • Geography (7)
  • GROUP 1 (6)
  • Group 2 (6)
  • Group 2A (23)
  • Group 4 (28)
  • Group1 (28)
  • History (3)
  • Important Organisation (20)
  • Model Question Paper (1)
  • NCERT CBSE TEXTBOOK (99)
  • Online Test (12)
  • Polity (19)
  • Previous Year Question Paper (41)
  • Results (7)
  • RRB NTPC (41)
  • RRB Railway recruitment Board (41)
  • samacheer kalvi Book Back Answers (71)
  • Samacheer Kalvi TextBook (13)
  • Science (8)
  • Social Issues (2)
  • Static GK (47)
  • Test Series (1)
  • TNPSC (53)
  • TNPSC (12)
  • TNPSC News Paper Material (104)
  • TNTET (1)
  • UPSC / IAS (8)

Recent Comments

  • Jeevitha U on TNPSC Group 2 Result in 2022 Preliminary Cut Off Marks, Merit List @ www.tnpsc.gov.in
  • Firoz Umrah on TNPSC PREVIOUS YEAR QUESTION PAPERS (2013 TO 2020) – History, Botony, Zoology, Physics, Chemistry, Polity, Economics
  • priya on TNPSC 6th to 12th Do You Know? |Glossary |Summary(wrap up) |Facts | Important Tables| www.vetripadi.com
  • Gogul on Dinamalar Railway RRB Exam Model Question Materials Day 23 (06.10.2020)
  • Venkadesan on Group 4 VAO General Tamil Model Test 2
  • Facebook
  • Youtube
  • Email
  • Telegram
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
Vetri Padi | TNPSC | GROUP Exam | IAS |Online Tuition
  • Home
  • Samacheer Kalvi Books
  • Current Affairs
  • Employment News
  • General English
  • General Studies
    • Economy
    • Environment
    • Geography
    • History
    • Important Organisation
    • Polity
      • Science
      • Social Issues
  • NCERT CBSE TEXTBOOK
  • General Tamil
  • Previous Year Question Paper
  • TNPSC
    • Group 2
    • Group 2A
    • Group 4
    • Group1
  • Static GK
  • Blog
  • Online Test
@2021 - All Right Reserved. Designed and Developed by PenciDesign
Sign In

Keep me signed in until I sign out

Forgot your password?

Password Recovery

A new password will be emailed to you.

Have received a new password? Login here