முதல்வர் ஸ்டாலின் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்

0
72

மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் கையெழுத்து குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.4000 கொரோனா நிவாரணம்.

சென்னை தலைமைசெயலகத்திற்கு சென்ற ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார்.  பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் முதல் கையெழுத்திட்டார்.ரேஷன் அட்டை தாரர்களுக்கு தல்தவணையாக ரூ.2 ஆயிரம், ஆவின் பால் விலை குறைப்பு, நகர் பேருந்துகளில் பெண்கலுக்கு இலவசம் போன்ற கோப்புகளில் முதல் கையெழுத்திட்டார்.
  1. முதல் கையெழுத்தாக 2.07 கோடி அரிசி குடும்ப அட்டை தாரர்களுக்கு நிவாரணமாக, ரூ.4 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதல் கையெழுத்திட்டார். முதல் தவணையாக, இம்மாதமே ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
  2. ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 ஆக குறைப்பு
  3. அரசு உள்ளூர் பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம். இதற்கான அடையாள அட்டை வழங்கப்படும். நாளை முதல் பெண்கள் பயணிக்கலாம்.
  4. மக்களின் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை உருவாக்கி, அதற்கு ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமித்தல்.
  5. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கும் .
    இவ்வாறு 5 கோப்புகளில் முதல்வர் ஸ்டாலின் கையெழுத்திட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here