நவம்பர் 1ல் பள்ளி திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம்

நவம்பர் 1ல் பள்ளி திறக்கும் போது பெற்றோர் ஒப்புதல் கடிதம் அவசியம்

தமிழகத்தில் நவம்பரில் முதல் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படவுள்ளது.

மாணவர்களின் பெற்றோரிடம் ஒப்புதல் கடிதம் பெற வேண்டும், என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.கொரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளில் திறக்கப்பட்டு தற்போது 9 ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகள் நடக்கிறது. நவ., 1 முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை திறக்கப்படவுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை சார்பில் அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்களிடம் ஒப்புதல்கடிதம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் எனது மகன்/ மகள் பள்ளிக்கு அனுப்ப முழு விருப்பத்துடன் ஒப்புதல் அளிக்கிறேன். கோவிட் -19 தொற்று குறித்து முழுமையாக அறிந்துள்ளேன், எனது குழந்தையை பள்ளிக்கு அனுப்பும் போது எடுக்க வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி முழுமையாக தெரியும்.

தொற்று நோய் குறித்து பள்ளி தலைமையாசிரியர் வழங்கிய அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவேன், என எழுதப்பட்ட கடிதத்தில் மாணவரின் பெற்றோர்,பாதுகாவலர் கையெழுத்திட்டு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

Leave a Comment