முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?

முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி?

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன, மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு உதவி கிடைக்கிறது. கடைசியாக 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது.

இத்திட்டத்தில் பதிவு செய்வது எப்படி என்று நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. பதிவுசெய்பவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படுகின்றன. அதை வைத்து காப்பீட்டு உதவி பெறலாம்.

இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்ய குடும்ப அட்டை கட்டாயம் தேவை. ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு குறைவாக இருக்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலரிடமிருந்து வருமான சான்று பெறவேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் குடும்ப அட்டை மற்றும் வருமான சான்றிதழை வழங்க வேண்டும். அங்கேயே பதிவுசெய்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த அடையாள அட்டையில் குடும்பத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும். 2 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் கைரேகைப் பதிவு இருக்கும்.

இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களுக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

 

Important Links:

Text BOOK For Competitive Exams

Previous Year Question Papers Download 

 Tamil Nadu Government Exam Notes:

TNPSC Previous year question papers collections in single PDF

Mental Ability 

Other Important Links:

General English

General Tamil

News Paper Materials 

RRB RAILWAY RECRUITMENT BOARD (RRB NTPC) material free download

EMPLOYMENT NEWS

GENERAL AWARENESS FOR COMPETITIVE EXAMINATIONS

Tags:

new health insurance scheme for tamil nadu government pensioners 2020,new health insurance scheme for tamil nadu government pensioners 2021,tamil nadu government health insurance scheme,health insurance for tamilnadu government employees,lic health insurance scheme,lic health insurance amount,lic medical insurance scheme,tamil nadu chief minister health insurance scheme,tamil nadu government new health insurance scheme application form,tamil nadu government new health insurance scheme for pensioners,tamil nadu new health insurance scheme 2018,tamil nadu police new health insurance scheme,tamil nadu new health insurance scheme 2016,tamil nadu government new health insurance scheme for public,national health insurance scheme for tamilnadu government employees,government of tamil nadu health insurance scheme,tamil nadu pensioners health insurance scheme 2018,tamil nadu state government health insurance scheme,tamil nadu government star health insurance scheme,tamil nadu chief minister health insurance scheme (tncmchis),tn government health insurance scheme,tn govt health insurance scheme,tamil nadu chief minister health insurance scheme website,health insurance tamil nadu,tamil nadu new health insurance scheme 2014,tamil nadu new health insurance scheme 2012,top 5 health insurance in tamil nadu,health insurance plan tamilnadu,

Leave a Comment