17th May 2020 Current Affairs in Tamil

17th May 2020 Current Affairs in Tamil

17th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

17th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  1. நாயின் மோப்ப சக்தியால் கரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்கும் திட்டம்: பரிசோதனையைத் தொடங்கியது பிரிட்டன் அரசு.
  • கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை அவர்களுக்கு அறிகுறி வரும் முன்பே நாயின் மோப்ப சக்தியால் கண்டுபிடிக்கும் திட்டத்தின் பரிசோதனை முயற்சிகளை பிரிட்டன் இன்று முறைப்படி ரூ.5 கோடி நிதியுதவி தொடங்கியது.
  • ஒரு நோயாளியின் உடலில் உருவாகும் வியர்வை வாசத்தை வைத்து, அதே நோய் எத்தனை பேரைத் தாக்கி இருக்கிறது என்று கண்டுபிடிப்பதாகும்.
  • இதற்கு முன் நாய்கள் மூலம் புற்றுநோய், பார்க்கின்ஸன் நோய், பாக்டீரியா தொற்று போன்றவை வெற்றிகரமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்தப் பரிசோதனையில் லேப்ரடார் வகை நாய்கள், காக்கர் ஸ்பானியல்ஸ் வகை நாய்கள் என மொத்தம் 6 நாய்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
  • இதற்கான பயிற்சி முடிந்தபின், கரோனா அறிகுறி இல்லாமல் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட நாய்களால் கண்டறிய முடியும்” எனத் தெரிவித்தார்.
  • இந்தப் பரிசோதனை வெற்றிகரமாக அமைந்தால் ஒருமணி நேரத்துக்கு 250 பேரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்களா எனக் கண்டறிய முடியும்.
  1. அமெரிக்காவின் சிகாகோவைச் சேர்ந்த ரஸ்டான்டி சென்டர் ஃபார்சோஷியல் செக்டார் இன்னோவேஷன், கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஏற்பட்ட விளைவுகள் குறித்துஆய்வை நடத்தியது. 27 மாநிலங்களில் உள்ள 5,800 வீடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதன்முடிவு குறித்து அந்த அமைப்பு கூறியிருப்பதாவது:
    • கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
    • இதனால் 10 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோய்விட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் 84 சதவீத இந்தியர்களின் மாத வருவாய் வெகுவாகக் குறைந்துவிட்டது. பெரும்பாலான மக்கள் இனி எப்படி வாழ்க்கையை நடத்துவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
    • கிராமப்புறப் பகுதிகள் ஊரடங்கால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. திரிபுரா, சத்தீஸ்கர், பிஹார், ஜார்க்கண்ட், ஹரியாணா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா

  1. தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் 8 கோடி குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க ஏற்பாடு.
  • தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வராதவர்கள் அல்லது மாநிலங்களின் குடும்ப அட்டைகளைப் பெறாத 8 கோடி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் வழங்கும் திட்டம் இதில் அடங்கும். ஒரு நபருக்கு ஒரு மாதத்துக்கு 5 கிலோ என்ற அடிப்படையில் இரண்டு மாதங்களுக்கு (2020 மே, ஜூன் மாதங்களுக்கு) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
  1. மனித உடலில் பொருத்தப்படக் கூடிய தாமாகவே சிதைவுறும் அடுத்த தலைமுறை உலோகக் கலவை சர்வதேச உயர்நிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகளால் தயாரிக்கப்பட்டுள்ளது.
    • தன்னாட்சி அமைப்புகளான, தூள் உலோகவியல் மற்றும் புதியஉலோகங்களுக்கான, சர்வதேச உயர்நிலை ஆராய்ச்சி மையம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத் துறையின் கீழியங்கும்திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரத் திருநாள் மருத்துவ அறிவியல் கழகத்தின் விஞ்ஞானிகள் ஆகியோர் இணைந்து, அடுத்த தலைமுறைக்கான இரும்பு மற்றும் மாங்கனீசை அடிப்படையாகக் கொண்ட உலோகக்கலவையைத் தயாரித்திருக்கிறார்கள்.
    • தற்போது மனித உடலில் நிரந்தரமாகப்பொருத்தப்படும் உலோகப்பொருள்கள் மனித உடலில் நிரந்தரமாக இருந்து உள்ளுக்குள்ளேயே நச்சுத்தன்மை பரவுதல் (systemic toxicity), நீடித்த வீக்கம் (Chronic inflammation), நாளக்குருதி உறைவு (Thrombosis) போன்ற நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன.
    • இதற்கு, சிறந்த ஒரு மாற்றாக, தானாகவே சிதைவுறும் பொருட்கள் (Fe, Mg, Zn மற்றும் பாலிமர்)உள்ளன. இவை, குணப்படுத்தும் முறையில் பங்கேற்று, மனித உடலில் எந்தவிதத்துகள்களும் தங்காமல், தாமாகவே படிப்படியாக சிதைவுறும் தன்மை கொண்டவை.
    • அதேசமயம் இயந்திர ஒருங்கிணைப்பையும் பராமரிக்கக் கூடியவை.
  1. கோவிட்-19 நோயை முறியடிப்பதற்காக, நடமாடும் உள்ளரங்கு கிருமிநாசினித் தெளிப்பான் கருவிகளை இரண்டை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கழகத்தின் சிஎஸ்ஐஆர், துர்காபூரிலுள்ள மத்திய இயந்திரவியல் பொறியியல் ஆராய்ச்சிக் கழகத்தின் விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
    • இந்தக்கருவிகளை, தொற்றக்கூடிய நுண்கிருமிகளை நீக்கி,தூய்மைப்படுத்துவதற்கு, குறிப்பாக மருத்துவமனைகளில் பயன்படுத்த முடியும்.
    • மின்கலன் சக்தியால் இயங்கக்கூடிய கிருமிநாசினி தெளிப்பான் மற்றும் நடமாடும் உள்ளரங்கு கிருமிநாசினிக்கருவி {Battery Powered Disinfectant Sprayer (BPDS) and Pneumatically Operated Mobile Indoor Disinfection (POMID)}என்ற இந்தக் கருவிகள் அடிக்கடி தொடப்படக்கூடிய பகுதிகளான மேஜைகள், கதவுத் தாழ்ப்பாள், குமிழ்கள், மின் விசைகள், கவுண்டர் மேசைகள், கைப்பிடிகள், சாய்வு மேசைகள்,தொலைபேசிகள், கணிப்பொறி விசைப்பலகைகள்,கழிவறைகள், போன்றவற்றை சுத்தப்படுத்தவும்,கிருமிகளை நீக்கவும் பயன்படும்.
  1. பொது இடங்களில் எச்சில் துப்ப தடை
  • கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கும் பொது இடங்களில் எச்சில் துப்பவும் தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • ஏற்கெனவே இது தொடர்பாக உத்தரவுகளை பிறப்பித்துள்ள ராஜஸ்தான், ஜார்க்கண்ட் மாநில அரசுகளின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர், மற்ற மாநிலங்களும் இதை பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  1. எட்டாவது அட்டவணைப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளில் அதன் மாநிலங்களை சேர்ந்த குடிமைப்பணி அதிகாரிகள் பேசியுள்ளனர். ‘Distanced by Corona’ எனும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள கரோனா பரவலை தடுப்பதான ஒரு நம்பிக்கை வீடியோ யூடியூப்பில் மெல்ல, மெல்ல வைரலாகி வருகிறது.
  • இதே நோக்கில், ஒரு வீடியோவாக தமிழரும் மத்திய வருமான வரித்துறையின் கூடுதல் ஆணையராக பெங்களூருவில் பணியாற்றும் எஸ்.சுந்தர் ராஜன்.ஐஆர்எஸ் தயாரித்துள்ளார்.
  1. உத்திரப்பிரதேச எம்எல்ஏக்களின் தொகுதி வளர்ச்சிக்கான நிதியில் பசுக்களைப் பாதுகாக்க நிதி ஒதுக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏற்றவாறு அம்மாநில சட்டங்களில் திருத்தம் செய்யப்பட உள்ளது.
    1. 2020-21 ஆம் ஆண்டு முதல் தம் தொகுதி வளர்ச்சி நிதியில் பசுக்களுக்கு தங்குமிடம், சுற்றுச்சுவர் அமைக்கவும் ஒதுக்கலாம். ஆனால், இதை தனியாரால் பராமரிக்கப்படும் கோசாலைகளுக்கு அளிக்க முடியாது.

தமிழகம்

  1. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனாசிறப்பு வார்டில், சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் உணவு பொருட்களை வழங்க 3 ரோபாக்களை சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வழங்கியுள்ளது.
    • இதேபோல மதுரை மருத்துவக் கல்லூரிக்கும் 3 ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களில் உணவு, பழம், மருந்து போன்றவற்றை வைத்து ரிமோட் மூலம் இயக்கலாம்.
    • இதன் மூலம் தேவையில்லாமல் நோயாளிகளின் அருகில் மருத்துவர்களும், செவிலியர்களும் சென்று தொற்றுக்கு ஆளாகாமல் தடுக்கலாம்.
    • இந்த ரோபோக்கள் மொத்தம் 15 கிலோ எடை வரையில் சுமந்து செல்லும் திறன் பெற்றவை.
    • ரோபோக்களின் செயல்பாட்டை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பொது சுகாதாரத்துறை மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவர்களிடம் ஒப்படைத்தார்.
  2. செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு உதடு மறைவற்ற முகக்கவசங்கள்             வழங்கப்படுவதாகதமிழக அரசுதெரிவித்துள்ளது.
  • மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகங்கள் மூலம் செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகள், காது கேளாத ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள், காது கேளாத சிறப்பு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் வாய் பேச இயலாத பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் ஆகியோருக்கு வழங்கும் விதமாக திட்டமிடப்பட்டு தமிழ்நாட்டில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்படுகின்றது.
    • இதன் மூலம் காது கேளாத நபர்கள் பிறருடன் தகவல் பரிமாற்றம் செய்யும்போது பிறரின் உதட்டு அசைவு மூலம் உரையாடலைத் தெளிவாக அறிவதற்கு மிகுந்த பயன் உள்ளதாக அமையும்.

வர்த்தகம்

  1. ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி தேவைக்கு நிறுவனம் பயன்படுத்தி வந்த டிஜிட்டல் கையெழுத்துமுறைக்குப் பதிலாக மின்னணு கையெழுத்து வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    • தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அவர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணம் வழங்க நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற அலுவலர் டிஜிட்டல் கையெழுத்துசான்றிதழ் டாங்கிளை (டிஎஸ்சி டாங்கிள்) பயன்படுத்துவது வழக்கம். அந்த டாங்கிள் நிர்வாக வளாகத்தில் இருப்பதால் ஊரடங்கால் அதைப் பயன்படுத்துவதில் சிரமம் உள்ளது.
    • எனவே அந்த நிறுவனங்கள் உடனடியாக மின்னணு கையெழுத்து (இ- சைன்) வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். மின்னணு கையெழுத்துக்குத் தேவையான அனைத்து சான்றொப்ப நடவடிக்கைகளை நிறுவனத்தின் அதிகாரபூர்வ மின்னஞ்சல் வழியாக ஏற்படுத்திக்கொள்ளலாம்.

இன்றய தினம்

  1. 1498 – வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
  2. உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள்.
PDF Download Here

 

Tags : current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,17 may 2020 current affairs in tamil , current affairs tamil May 2020, current affairs tamil 17 may 2020,

Leave a Comment