Home Current Affairs 12th May 2020 Current Affairs in Tamil

12th May 2020 Current Affairs in Tamil

by Firoz Umrah

12th May 2020 Current Affairs in Tamil

12th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

12th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  • ஒவ்வோராண்டும் ஆங்கில அகராதிகள் ஆண்டின் சிறந்த ஆங்கிலச் சொல் என சொற்களைத் தேர்ந்தெடுத்து அறிவிக்கின்றன. ஆக்ஸ்போர்டு அகராதி கடந்த சில ஆண்டுகளாக சிறந்த ஹிந்திச் சொல்லையும் தேர்ந்தெடுத்து வருகிறது. இவ்வாறாக தமிழிலும் ஆண்டின் சிறந்த தமிழ்ச்சொல் தேர்ந்தெடுக்கப்படும் சூழல் அமையும் என்று நம்புவோம்.

2019 இன் சிறந்த ஆங்கிலச் சொற்களாக

  • கிளைமேட் எமர்ஜென்சி(climate emergency) (ஆக்ஸ்போர்டு),
  • அப்சைக்கிளிங் (upcycling/மறுசுழற்சி) (கேம்பிரிட்ஜ்),
  • தே (they/அவர்கள்) (மெரியம் வெப்ஸ்டர்),
  • கிளைமேட் ஸ்ட்ரைக் ” (climate strike/கால நிலை வேலை நிறுத்தம்) (காலின்ஸ்) ஆகிய சொற்களை அகராதிகளும்,
  • எக்சிஸ்டென்சியல் ” (existential /இருத்தலியல்)என்ற சொல்லை டிக் ஷனரி இணையதளமும் தெரிவு செய்துள்ளன.
  • சம்விதான் என்ற சொல்லை சிறந்த ஹிந்திச் சொல்லாக ஆக்ஸ்போர்டு அகராதி தேர்ந்தெடுத்துள்ளது. சம்விதான் என்றால் அரசியல் அமைப்பு என்று பொருளாகும்.
  1. ஈரானின் ஜாஸ்க் துறைமுகத்தில் இருந்த கோனாரக் என்ற ஈரானிய போர்க் கப்பல், ஜமானாரன் என்ற மற்றொரு கப்பலில் இருந்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைப் பயிற்சியின்போது தவறுதலாக தாக்குதலுக்குள்ளானது. அதிலிருந்த 19 மாலுமிகள் பலியாகினர். 15 பேர் காயமடைந்தனர்.
  • 2016-ம் ஆண்டில் தைவான் போர்க்கப்பல் ஒன்று தவறுதலாக மற்றொரு கப்பலைத் தாக்கியதில் அதன் கேப்டன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
  • நெதர்லாந்தில் தயாரிக்கப்பட்ட்ட போர்க் கப்பலான கோனாரக், 447 டன் எடையும், 47 மீட்டர் நீளமும் உடையது.
  • 1988 முதல் ஈரான் கடற்படையில் செயல்பாட்டில் உள்ளது.
  1. தற்போது, கூகுள் தனது கொள்கையில் சில மாற்றங்களை செய்துள்ளது. அதாவது, தனது ஊழியர்கள் டிசம்பர் 2020 வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று அறிவித்துள்ளது.
  • புதிய கொள்கையின்படி, 2020 மே 22-ம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும், கூகுள் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான அல்ஃபாபெட்-டின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

இந்தியா

  1. அனைத்து மாநில தலைமைச் செயலாளா்களுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ‘மெல்லக் கூடிய புகையிலைப் பொருள்கள் மற்றும் பான் மசாலா போன்ற பொருள்களைப் பயன்படுத்துவதால் வாயில் உமில் நீா் அதிகம் சுரப்பதால், எச்சில் துப்பும் நிலை ஏற்படுகிறது.
  • பொது இடங்களில் இதுபோல எச்சில் துப்புவது, கரோனா நோய்த் தொற்று பரவலை மேலும் அதிகரித்துவிடும். எனவே, இதற்கு தடை விதிக்க மாநிலங்கள் முன்வரவேண்டும்’ எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.
  • 22 மாநிலங்கள், 6 யூனியன் பிரதேசங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மாநிலங்கள் எடுத்துள்ளன.
  1. ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியையும் ஒன்றிணைத்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு இல்லாத இந்திய வரைபடத்தை வெளியிட்டு, இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை அறிக்கை வெளியிட்டிருந்தது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது.
  • அதாவது, ஜம்மு – காஷ்மீரில் இதுவரை பாகிஸ்தான் ஆக்ரமிப்புக் காஷ்மீரை தனித்துக் காட்ட ஒரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு கூகுள் வரைபடத்தில் இருந்து வந்தது.
  • அது தற்போது நீக்கப்பட்டு, ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்திய வரைபடத்தில் காண்பிக்கப்படுகிறது.
  • உண்மை என்னவென்றால், இந்தியாவுக்குள் இருந்து பார்க்கும் போது மட்டுமே ஜம்மு காஷ்மீருக்கு இடையே அந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு தெரியாது. அதே சமயம், இந்தியாவைத் தவிர்த்து வெளிநாடுகளில் இருந்து கூகுள் இந்திய வரைபடத்தைப் பார்த்தால் சாம்பல் நிறத்தில் அந்த கோடு தென்படும்.
  • அதாவது, ஒரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடாக இரு நாடுகளும் ஏற்றுக் கொள்ளாத நிலையில் அதை சாம்பல் நிறத்தில் காண்பிப்பதும்,
  • ஒரு எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை, அது இடம்பெற்றிருக்கும் நாடு ஏற்றுக் கொள்ளாதபட்சத்தில், அந்த நாட்டில் இருந்து கூகுள் வரைபடத்தைப் பார்க்கும் போது அந்த எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை காண்பிக்காத வகையிலும் கூகுள் மேப் வடிவமைக்கப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
  1. கரோனா வைரஸ் நோய் பாதிப்பில் முதல்கட்டமாக ஒரு உடலில் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புசக்தி) உருவாகியிருக்கிறதா என்பதைக் கண்டறியும் ரேபிட் கருவியை புனேவில் உள்ள இந்திய வைரலாஜி நிறுவனமும் (என்ஐவி), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுவும் (ஐசிஎம்ஆர்) இணைந்து ஐஜிஜி எலிசா டெஸ்ட் கருவி வெற்றிகரமாகத் தயாரித்துள்ளன என்று மத்திய அமைச்சர் ஹர்ஸவர்த்தன் தெரிவித்துள்ளார்.
  • இரண்டரை மணிநேரத்தில் 90 மாதிரிகளைப் பரிசோதிக்க முடியும்.
  • இதன் மூலம் மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் விரைவாகச் செயல்பட்டு அடுத்த கட்டத்துக்குச் செல்ல முடியும்.
  1. கரோனா வைரஸால் உலகமே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 90 நாடுகளுக்கு தூதரக ரீதியாகவும், மருத்துவ உதவிகளையும் வழங்க ரூ.100 கோடியில் மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.
  1. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம், திபெத்தில் அமைந்திருப்பதாக சீன அரசு செய்தியை பரப்பி வருகிறது. இதற்கு இந்திய, நேபாள மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
  • நேபாளத்தின் இமய மலைப்பகுதியில் சாகர் மாதா தேசிய பூங்காவில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இதனை ஐ.நா.சபையின் யுனெஸ்கோ அமைப்பும் அங்கீகரித்துள்ளது.

தமிழகம்

  1. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள 87 ஆண்டுகள் பழைமையான யானைக்கவுனி மேம்பாலம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது.
  • இந்தப் பாலம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டா் தூரத்தில் அமைந்துள்ளது.
  • கடந்த 1933-ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தப் பாலத்தின் வலது புறம் பேசின்பிரிட்ஜ் பணிமனையையும், இடதுபுறம் சால்ட் கோட்ரஸ் சரக்கு பணிமனையையும் இணைக்கும் விதமாக சென்னை சென்ட்ரல் பணிமனையின் வெளி செல்லும் பகுதியில் அமைந்துள்ளது.
  • 2008-09-ஆம் ஆண்டு ரூ.43.77 கோடி செலவில், மறுசீரமைக்கும் பணிகளுக்கான ஒப்புதல் பிங்க் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  1. தமிழகத்தில் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட நடமாடும் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கொடியசைத்துத் துவக்கி வைத்தார்
  • இந்த நடமாடும் அதிநவீன எக்ஸ்ரே கருவி பொருத்தப்பட்ட வாகனங்களின் மூலம் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று எக்ஸ்ரே எடுப்பதுடன், அப்பரிசோதனை முடிவினை மருத்துவர்கள் துரிதமாக கண்டறிந்து சிகிச்சை அளித்திடவும் இயலும். இன்னும் பிற நெஞ்சக நோய்களான ஆஸ்துமா, நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள், தொழிற் சார்ந்த நுரையீரல் நோய்களான சிலிக்கோசிஸ், பாகோசிஸ் போன்றவற்றை ஆரம்பத்திலேயே கண்டறியவும் இவ்வாகனம் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம்

  1. கச்சா எண்ணெய் வளத்தால் செல்வச்செழிப்பில் இருந்த சவுதி அரேபிய அரசு, அதலபாதளத்துக்கு விலை வீழ்ந்ததாலும், கரோனாவின் பாதிப்பாலும் வேறு வழியின்றி அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களை (ரூ.19.68 லட்சம் கோடி) குறைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது.
  • அதுமட்டுமல்லாமல் அடிப்படைப் பொருட்களுக்கான வரியை 3 மடங்காக அதாவது 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
  • மேலும் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து சவுதி அரேபிய மக்கள் பெற்று வந்த வாழ்வாதாரத் தொகையையும் சவுதி அரசு நிறுத்தவுள்ளது.

இன்றய தினம்

  1. 1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
  2. உலக செவிலியர் நாள்.
PDF Download Here

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

You may also like

Leave a Comment