11th May 2020 Current Affairs in Tamil

11th May 2020 Current Affairs in Tamil

11th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

11th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  1. சிங்கப்பூரில் சமூக இடைவெளியை கண்காணிக்க ரோபோ நாய்
  • சிங்கப்பூர் நகரின் பிஷான் அங் மோ கியோ பூங்காவில் ‘ஸ்பாட்’ என்கிற ரோபோ நாய், அங்கு வருவோரை கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
  • அமெரிக்காவின் ‘பாஸ்டன் டைனமிக்ஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்த எந்திர நாய், பூங்காவிற்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாவிட்டால் “விலகி இருங்கள், சமூக இடைவெளி கடைப்பிடியுங்கள்” என்னும் விழிப்புணர்வு வேண்டுகோளை தொடர்ந்து ஒலிக்கிறது.
  • நாயின் உடலில் சக்திவாய்ந்த கேமரா மற்றும் புள்ளி விவரங்களை ஆய்வு செய்யும் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பூங்காவிற்குள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாக அறிந்து விட இயலும்.
  1. ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் புதியதடுப்பு மருந்து கண்டறியப்பட்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இதில் கரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் தங்கும் நாட்களின் எண்ணிக்கையைக் குறைப்பதாக மேலும் அறிகுறிகளை முற்றிலுமாக நீக்குகிறது, ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • 2 வாரகால சிகிச்சைக்கான இந்த மருந்து,முதல் 7 நாட்களிலேயே தீவிரமாகசெயல்பட்டு கரோனா நோயாளிகளை குணப்படுத்து கிறது.
  • இன்டர்பெரான் பேட்டா-1பி என்ற மருந்து, லோபின்விர் – ரிடோனாவிர், ரிபாவிரின் என்ற தடுப்பு மருந்துகள் ஆகியவற்றின் கலவைதான் இந்த சிகிச்சையாகும்.
  • இந்த 3 மருந்துகளைக் கொடுக்கும் போது நோயாளியின் உடலில் உள்ள வைரஸின் அளவை விரைவாக அடக்குகிறது. அந்த சிகிச்சை நல்ல பலன் அளிப்பதாகத் தெரிய வந்துள்ளது.

இந்தியா

  1. கொரோனா வைரஸ் தொற்றுநோயை சமாளிக்க இந்தியாவிடம் உதவி கோரி வேண்டுகோள் விடுத்த 5 நட்பு நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளது.
  • மாலத்தீவுகள், மொரீசியஸ், மடகஸ்கார், கொமொரோஸ், சிசெல்ஸ் ஆகியவை ஆகும்.
  • இந்தியாவின் போர்க்கப்பல் களில் ஒன்றான கேசரி, அத்தியாவசிய மருந்து பொருட்கள், உணவுப்பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச்செல்கிறது.
  • மேலும், மொரீசியஸ், மடகாஸ்கர், கொமொரோஸ், சிசெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
  1. அயோத்தியில் கட்டப்பட இருக்கும் ராமர் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, பொதுமக்கள் வந்து வணங்கும் இடம் என்பதால் கோவில் கட்டுவதற்காக வழங்கப்படும் நன்கொடை தொகைக்கு வருமான வரி சட்டம் 80ஜி(2) (பி) பிரிவின் கீழ், வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அந்த வாரியம் வெளியிட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது.
  1. மே 12ம் தேதி முதல் மெதுவாகக் குறைந்த அளவில், தேர்ந்தெடுக்கப்பட்ட தடங்களில் பயணிகள் ரயிலை இயக்க இந்திய ரயில்வே முடிவெடுத்துள்ளது.      15 ஜதை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
  • இது புதுடெல்லி நிலையத்திலிருந்து திப்ருகார், அகர்தாலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, அகமதாபாத், புவனேஷ்வர், செகந்தராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மத்கவான், மும்பை செண்ட்ரல், அகமதாபாத் மற்றும் ஜம்முதாவி ஆகிய நகரங்களை இணைக்கும் ரயில்களாக இருக்கும் என்று ரயில்வே அறிவித்துள்ளது.
  1. ஆப்ரேஷன் சமுத்திர சேது திட்டத்திம்

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் மாலத்தீவில் சிக்கித் தவித்த இந்தியர்களை மீட்கும் வகையில் செயல்படுத்தப்பட்ட ஆப்ரேஷன் சமுத்திர சேது திட்டத்தில், 698 இந்தியர்களை அழைத்துக்கொண்டு கடற்படையின் ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் இன்று கொச்சி துறைமுகம் வந்து சேர்ந்தது.

தமிழகம்

  1. தமிழகத்தில் 34 வகையான தனிக்கடைகள் குறிப்பிட்ட நேரத்தில் இயங்கலாம் என தமிழக அரசுதெரிவித்துள்ளது. சலூன், பியூட்டி பார்லர்களுக்கு அனுமதியில்லை. அதன் தொடர்ச்சியாக நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர தமிழ்நாடு முழுவதும் பல செயல்பாடுகள் / பணிகள், (மே 11), திங்கட்கிழமை முதல் குறிப்பிடப்பட்ட நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்படுவது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2. ஆதியோகி திவ்ய தரிசன 3-டி ஒளி, ஒலி காட்சிக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது

  • கோவை ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. இங்கு நடத்தப்படும் `ஆதியோகி திவ்ய தரிசனம்’ என்ற 3-டிஒளி, ஒலி காட்சிக்கு சர்வதேச தொழில்நுட்ப விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த ஒளி-ஒலி காட்சியை வடிவமைத்த `ஆக்சிஸ் 3-டி’ ஸ்டுடியோவுக்கு, மோன்டோ டி.ஆர். என்ற சர்வதேச தொழில்நுட்ப இதழ் இவ்விருதை வழங்கி கவுரவித்துள்ளது.

வர்த்தகம்

  1. விஷவாயு கசிவு எதிரொலி; தொழிற்சாலைகளுக்கான புதிய நெறிமுறைகள் வெளியீடு
  • வருகிற மே 17ந்தேதி வரை நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும். 
  • இதற்கு பின் செயல்படும் தொழிற்சாலைகள், பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதி செய்த பின்னரே உற்பத்தியை தொடங்க வேண்டும். 
  1. முதலில் சோதனை ஓட்டமாகத்தான் தொழிற்சாலைகளை துவங்க வேண்டும்.
  2. முறையான மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னரே தொழிலாளர்களை பணி செய்ய அனுமதிக்க வேண்டும். 
  3. தொழிற்சாலைகளில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என அதில் தெரிவித்து உள்ளது.

இன்றய தினம்

  1. இந்தியக் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் டெல்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
  2. 1998 – இந்தியா பொக்ரானில் மூன்று அணுச் சோதனைகளை நடத்தியது.
  3. தேசீய தொழில் நுட்ப தினம் – இந்தியா

PDF Download Here

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

 

Leave a Comment