3rd May 2020 Current Affairs in Tamil

3rd May 2020 Current Affairs in Tamil

3rd May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

3rd May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

உலகம்

  1. கரோனா நோய்த்தொற்று பரவலைத் தவிா்ப்பதற்காக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக, உலக மக்கள்தொகையில் 3-இல் ஒரு பங்கினா் வீட்டுக்குள் முடங்கி உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில், இந்தியா, சீனா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன் ஆகிய நாடுகளில் மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  2. ஹெச்1பி நுழைவு இசைவு (விசா) வைத்திருப்போா், கிரீன் காா்டு (அமெரிக்க குடியுரிமை) பெற விண்ணப்பித்திருப்போா் தங்களது ஆவணங்களை சமா்ப்பிப்பதற்கு அமெரிக்க அரசு 60 நாள்கள் கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் ஹெச்1பி நுழைவு இசைவு வைத்திருப்போரில் அதிகம் போ் இந்தியாவைச் சோ்ந்த தகவல்தொழில்நுட்ப ஊழியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  3. சீன அரசு டெலிகாம் நிறுவனமான ‘சீனா மொபைல்’ உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தில் சீனா 5ஜி (5-ம் தலைமுறை இணைய சேவை) சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது.
  • சீனாவின் பக்கம் உள்ள எவரெஸ்ட் சிகரத்தில் 5,300, 5,800 மற்றும் 6,500 அடி உயரத்தில் 5ஜி நெட்வொர்க் கோபுரங்களை கடந்த வாரம் நிறுவியது.
  • 6,500 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ள 5ஜி நெட்வார்க் டவர்கள் நேற்று முன்தினம் முதல் இணைய சேவையை வழங்க நிறுவனம் தெரிவித்துள்ளது.
  • கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுவதற்கு மலையேற்ற வீரர்களுக்கு சீனா மற்றும் நேபாள அரசுகள் தடைவிதித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
  1. மேற்கில் ஆதிக்கம் செலுத்துவதற்காக ஆபத்தான ஆயுதங்களை அதிகபடுத்தும் ரஷ்யா இப்போது உலகின் மிகப்பெரிய ஸ்கிஃப் ஏவுகணை என்று அழைக்கப்படுவதை வடிவமைத்துள்ளது.
  • ரஷ்யாவின் ஆபத்தான அணுசக்தியால் இயங்கும் ஸ்கிஃப் ஏவுகணை கடலோரத்தில் உள்ளத என்றும்.
  • டெய்லி ஸ்டார், கிழக்கு மற்றும் மேற்கு இடையே ஒரு போர் வெடித்தால் கடைசி முயற்சியாக இதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளது.
  • செயல்படுத்தப்பட்டதும், ஸ்கிஃப் ஏவுகணை 6,000 மைல் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும். இது 60-மைல் வேகத்தில் பயணிக்க கூடியது.
  • கோபால்ட் -60 என்ற செயற்கை கதிரியக்கத்தால் கடல் மற்றும் கரையின் பெரிய பகுதிகளை மாசுபடுத்தும்.
  • பாதுகாப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்த ஏவுகணை ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்று உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பும் நோக்கம் கொண்டதாக உள்ளது.
  1. அமெரிக்காவின் கைலீட் சயன்சஸ் நிறுவனத்தின் வைரஸ் எதிர்ப்பு மருந்தான ‘ரெம்டெசிவிர் (remdesivir) மருந்தை அவசர சிகிச்சைக்குப் பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (யு.எஸ்.எஃப்.டி.ஏ) அனுமதி அளித்துள்ளது.
  • இந்த மருந்தைப் பயன்படுத்தும் உரிய காலஅளவு குறித்து அதாவது எத்தனை நாட்களுக்கு இதனைக் கொடுக்கலாம் என்பது தற்போது நடைபெற்றுவரும் கிளினிக்கல் ஆய்வுகளில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
  • இயல்பாக ஒரு மருந்தைச் சோதனை செய்த நாளில் இருந்து 90 நாட்களில் ஒப்புதல் வழங்கப்படும்.
  • ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தோருக்கும், சுவாசக் கருவிகளின் உதவி தேவைப்படுவோருக்கும் மட்டுமே ரெம்டெசிவிர் மருந்தைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  1. பங்கஜகஸ்தூரி நிறுவனம் உருவாக்கியுள்ள ‘ஜிங்கிவிர்-எச்’ என்ற ஆயுர்வேத மாத்திரையை கரோனா (கோவிட்-19) நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் பயன்படுத்தி சோதனை நடத்த இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலின் கீழ் செயல்படும் மத்திய அரசு நிறுவனமான இந்திய ஆய்வக சோதனைகள் பதிவகம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
  • நுரையீரல் தொற்றுகள், வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதில் இது நன்கு செயல்பட்டுள்ளது. அதேபோல, சுவாச சின்சைஷியல் வைரஸ், இன்புளூயன்சா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையிலும் இது சிறப்பாக செயலாற்றும் என்று கருதப்படுகிறது.
  • திருவனந்தபுரம் ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் மனித செல்களை வைத்து நடத்தப்பட்ட ஆய்வுக்கூடப் பரிசோதனையிலும் இது எந்த பக்க விளைவையும் ஏற்படுத்தவில்லை.
  1. உலகிலேயே அதிகமானோரால் பாா்க்கப்பட்ட தொலைக்காட்சி பொழுதுபோக்கு நிகழ்ச்சி என்ற சாதனையைராமாயணம்’ தொடா் படைத்திருக்கிறது. உலகம் முழுவதும் 7.7 கோடி மக்கள் இந்தத் தொடரைப் பாா்த்துள்ளனா்.
  • ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வீடுகளில் முடங்கிக் கிடக்கும் மக்களின் இறுக்கமான மனநிலையில் மாற்றத்தை உருவாக்கும் நோக்கில் தூா்தா்ஷன் சாா்பில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு மறுஒளிபரப்பு செய்யப்பட்டது.
  • ராமானந்த் சாகா் எழுதி, இயக்கி, தயாரித்த இந்தத் தொடா் முதன் முதலில் தூா்தா்ஷனில் 1987-ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா

  1. கொரோனா வைரசை எதிர்த்து களத்தில் முன்நின்று போராடுவோருக்காக 100 பாடகர், பாடகியர் இணைந்து ஒரு பாடல் பாடி இருக்கிறார்கள்.
  • இந்தப் பாடலை மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
  • ‘ஒரே நாடு, ஒரே குரல்’ என்ற தலைப்பிலான இந்த பாடல், 14 மொழிகளில் (தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம், மராத்தி, குஜராத்தி) பாடப்பட்டுள்ளது.
  • இந்த பாடல் ஒரே நேரத்தில் டி.வி. ரேடியோ, சமூக வலைத்தளம் என 100 டிஜிட்டல் தளங்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
  • பி.எம்.கேர்ஸ் நிதிக்கு உதவுவதற்காக இந்த பாடல் எங்கள் சங்கத்தின் அர்ப்பணிப்பு ஆகிறது.
  1. தெலுங்கானா மாநிலத்தில் தவித்து வந்த தொழிலாளர்கள் 1,200 பேர் நேற்று சிறப்பு ரெயில் மூலம் அவர்களுடைய சொந்த மாநிலமான ஜார்கண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  • ஐதராபாத் அருகே உள்ள லிங்கம்பள்ளி ரெயில் நிலையத்தில் இருந்து ஜார்கண்டில் உள்ள ஹாதியா என்ற இடத்துக்கு நேற்று அதிகாலை 4.50 மணிக்கு அந்த ரெயில் புறப்பட்டு சென்றது.
  1. கரோனா பாதித்தவர்களுக்கு தனியார் மருத்துவமனையிலும் முற்றிலும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில அரசு அறிவித்துள்ளது.
  • கரோனா பாதித்துள்ள மக்கள் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
  • மாநிலத்தின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் மகாராஷ்டிர மக்கள் அனைவரும் கொண்டு வரப்படுகிறார்கள் என்றும்,
  • இதுபோன்றதொரு அறிவிப்பை வெளியிட்ட முதல் மாநிலம் மகாராஷ்டிரம் என்றும் மகாராஷ்டிர சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.
  • முன்னதாக வெறும் 85 சதவீத மக்கள் மட்டுமே மாநில அரசின் மருத்துவக் காப்பீடு திட்டத்தின் கீழ் இருந்தனர்.
  • இப்போது ஒட்டுமொத்தமாக அனைத்து மக்களும் கொண்டு வரப்பட்டுள்ளனர்.
  1. பொறியியல் உட்பட உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் 100% திருப்பி அளிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச அரசு அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, ‘ஜெகனண்ணா வித்யா தீவெனா’ என்னும் திட்டத்தை இதற்கெனத் தொடங்கி அறிவித்துள்ளார்.
  • இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முந்தைய அரசு செயல்பட்ட காலத்தில் மிச்சமிருந்த தொகையை வழங்கவும் எங்கள் அரசு சார்பில் ரூ.1,880 கோடியை விடுவித்து உத்தரவிட்டுள்ளோம்
  • இத்திட்டத்தின் மூலம் ஆந்திர மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 12 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.

முன்னதாக ‘ஜெகனண்ணா அம்மா வோடி’ என்னும் திட்டத்தின் மூலம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் ஏழைத் தாய்மார்களுக்கு 1 முதல் 12-ம் வகுப்பு வரை ஒவ்வோரு ஆண்டும் ரூ.15 ஆயிரத்தை அரசே வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

  1. கரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில், மத்தியஅரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், கரோனா பாதிப்பு இருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசி்க்கும் மக்கள் தங்கள் ஸ்மார்ட் போனில் கண்டிப்பாக ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்துவது கட்டாயம் என்று மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.

ஆரோக்கிய சேது செயலி

  • இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் மூலம் கொரோனா பரவலைத் தடுக்க வெளியிடப்பட்ட செயலிதான், ‘ஆரோக்கிய சேது’.
  • தற்போது, இந்தியாவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்டு வரும் செயலிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
  • இந்தச் செயலி, ஜிபிஎஸ் மற்றும் ப்ளூடூத் மூலம் செயல்படுவதால், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இதே செயலியைப் பதிவிறக்கம் செய்து தங்கள் தகவல்களைக் கொடுத்திருந்தால், அதுவும் ஒரே இடத்தில் பதிவாகியிருக்கும். இதன்மூலம் மற்ற நபர்கள் அருகில் செல்லும்போது எச்சரிக்கை செய்கிறது.
  • 13 நாள்களுக்குள் 5 கோடிக்கும் அதிகமானோர்களால் தரவிறக்கம் செய்யப்பட்டு சாதனை படைத்தது.

தமிழ்நாடு

  1. இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் org என்ற இணைய முகப்பில் உள்ள “Return to Tamil Nadu” என்ற இணையப் படிவம் (பச்சை நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இதேபோன்று, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்தோர், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது தங்கியுள்ளனர். அவர்கள் குறித்த விவரத்தை nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் (பழுப்பு நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது”.
  1. பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்புத் துறையின் புதிய இயக்குநராக டாக்டா் டி.எஸ். செல்வவிநாயகம் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  2. சென்னையில் ஊரடங்கு காலத்தில் விதிமுறைகளை மீறினால் ரூ.100 அபராதத்துடன் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுவா் என்று சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வர்த்தகம்

  1. வங்கிகள் வழங்கிய உணவு சாரா கடன் வளா்ச்சி விகிதம் சென்ற மாா்ச்சில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.
  • ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
    • நிறுவனங்கள் மற்றும் சேவைத் துறைக்கு வங்கிகள் வழங்கிய கடன் கணிசமாக அளவில் வீழ்ச்சியடைந்ததையடுத்து நடப்பாண்டு மாா்ச் மாதத்தில் வங்கிகளின் உணவு சாராக் கடன் ரூ.92.85 லட்சம் கோடியாக இருந்தது.
    • கடந்த ஆண்டு மாா்ச் மாதத்தில் 3 சதவீதமாக இருந்த இக்கடனின் வளா்ச்சி வேகம் நடப்பாண்டில் 7.6 சதவீதமாக குறைந்துள்ளது.
    • மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரியுடன் ஒப்பிடும்போது நடப்பாண்டு பிப்ரவரியிலும் உணவு சாரா கடன் வளா்ச்சி விகிதம் 13.2 சதவீதத்திலிருந்து 7.3 சதவீதமாக குறைந்துள்ளது.
  • நடப்பாண்டு மாா்ச்சில் சேவை துறைக்கு வழங்கிய கடன் வளா்ச்சி விகிதம் 17.8 சதவீதத்திலிருந்து கணிசமாக குறைந்து 8.5 சதவீதமாகியுள்ளது என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.
PDF Download Here

Leave a Comment