9th May 2020 Current Affairs in Tamil

9th May 2020 Current Affairs in Tamil

9th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

9th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  1. கரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் அடுத்த 9 மாதங்களில் குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என்று ஐ.நா. சபை கணித்துள்ளது.
  • உலகம் முழுவதும் 11.6 கோடி குழந்தைகள் பிறக்கும் எனத் தெரிகிறது.
  • இந்தியாவில் மட்டும் 2.01 கோடி குழந்தைகளும் சீனாவில் 1.35
  • இந்திய ஆர்த்ரிட்டிஸ் (மூட்டுநோய்) பவுண்டேஷன் தலைவரும்,பொது சுகாதார நல நிபுணருமான டாக்டர் சுஷில் சர்மா கூறும்போது, “கரோனா பிரச்சினை காலத்தில் அதிகளவில் குழந்தை பிறக்கும்போது, பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதமும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
  1. அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான, ‘கூகுள்’ மற்றும் ‘பேஸ்புக்’ இந்த ஆண்டு இறுதிவரை தங்கள் நிறுவன ஊழியர்களை வீட்டிலிருந்தபடி வேலை செய்ய அனுமதிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
  2. பிரிட்டனில் உள்ள ஸ்டிர்லிங் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிச்சர்ட் குய்லியம், நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி அதிலிருந்து விடுபட்ட 33 நாட்களுக்கு பிறகும் அவரது மலத்தில் நோய் பரப்பும் கிருமி இருப்து உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கழிவுநீராலும் நோய் பரவும் என தெரிய வந்துள்ளது.

தட்ப வெப்பநிலையை பொறுத்து கொரோனா கிருமி கழிவுநீரில் 14 நாட்கள் வரை உயிர்வாழ முடியும். பெரும்பாலான கொரோனா நோயாளிகள் அறிகுறியற்றவர்களாகவோ, சில லேசான அறிகுறிகளுடனோ வீட்டிலேயே இருப்பதால் சாக்கடை வழியாகவும் அந்த கிருமி பரவுவதற்கான அபாயம் உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. ஈராக்கின் பிரதமராக முஸ்தபா அல் காதிமி அதிகாரப்பூர்வமாக பதவி ஏற்றார். மேலும் அவரது தலைமையிலான மந்திரி சபையில் 15 மந்திரிகள் பதவி ஏற்றனர்.

இந்தியா

  1. கைலாஷ்-மானசரோவர் யாத்திரையை மேற்கொள்ளும் புதிய வழியாகவும் எல்லைப்பகுதியை இணைக்கும் வழியாகவும், 80 கி.மீ நீளம் உள்ள தர்ச்சூலாவில் (உத்தரகண்ட்) இருந்து லிப்புலேக் (சீனா எல்லை) வரையிலான இணைப்பு சாலையை பாதுகாப்பு மந்திரி திரு ராஜ்நாத் சிங் இன்று நடைபெற்ற ஒரு சிறப்பு நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
  • மேலும் திரு ராஜ்நாத் சிங் காணொலி காட்சி மூலம் பித்தோராகரில் இருந்து கூஞ்சி வரையிலான பல வாகனங்களின் தொகுப்பு பயணத்தையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
  • புத்தமதத்தினர் மற்றும் ஜைனர்கள் இந்த யாத்திரைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன.
  • சாலையின் உயரமானது 6,000 அடியில் இருந்து 17,060 அடி வரை அதிகரிக்கிறது.
  • இதனால், கைலாஷ் மானசரோவர் யாத்ரீகர்கள் மிகச் சிரமமான 90 கி.மீ பயணத்தைத் தவிர்த்து சீன எல்லை வரை தற்போது வாகனங்கள் மூலம் செல்ல முடியும்.
  1. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் செயல்படும் ரசாயன தொழிற்சாலையில் நேற்று அதிகாலை விஷவாயு கசிவு ஏற்பட்டது. இதில் சிறுமி உட்பட 11 பேர் உயிரிழந் தனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட னர். இதில் 200 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எல்.ஜி. பாலி மர்ஸ் லிமிடெட் தொழிற்சாலை

விசாகப்பட்டினத்தில் ஆர்.ஆர் வெங்கடாபுரத்தில் கடந்த 1961-ம் ஆண்டு ஹிந்துஸ்தான் பாலிமர்ஸ் ராசாயன தொழிற்சாலை தொடங்கப்பட்டது. கடந்த 1978-ம் ஆண் டில் இந்த தொழிற்சாலையை யூ.பி. குரூப் வாங்கியது. அதன் பின்னர் கடந்த 1997 ஜூலையில் தென் கொரிய நிறுவனமான எல்.ஜி. குரூப்ஸ் (எல்.ஜி. கெமிக்கல்ஸ்) தொழிற்சாலையை வாங்கி, எல்.ஜி. பாலி மர்ஸ் லிமிடெட் என பெயர் சூட்டியது. இங்கு தினமும் 417 டன் பாலிஸ்டெரெயின் ரசாயனம் தயாரிக்கப்படுகிறது.

பாலிஸ்டெரெயின் ரசாயனம்

  • பாலிஸ்டெரெயின் ரசாயனம் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
  • இந்த விஷவாயு வெளியில் வந்தவுடன் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை உறிஞ்சிவிடும். ஆக்ஸிஜன் கிடைக்காமல் மக்கள் விஷவாயுவை உட்கொள்ளும் போது 10 நிமிடத்திற்குள் உள்ளுறுப்புகள் தங்கள் செயல்பாட்டை இழக்க நேரிடும்.
  • கசிந்த விஷவாயுவை சுவாசித்தவர்களுக்கு முதலில் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். தலைவலி, மூச்சுத் திணறல், கண் எரிச்சல், வாந்தி, மயக்கம், காது கேளாமை ஏற்படும். அதி கமாக விஷவாயுவை சுவாசித்திருந்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயமும் உள்ளது
  • ரூ.1 கோடி இழப்பீடு முதல்வர் அறிவித்தார்.
  1. விசாகப்பட்டினம் ரசாயன ஆலையில் விஷவாயு கசிந்து 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில், எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் முதற்கட்டமாக ரூ.50 கோடி செலுத்த தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  • இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க,  நீதிபதி பி. சேஷாசயன ரெட்டி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ் குமார் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
  • இக்குழு வருகிற மே 18 ஆம் தேதிக்குள் விபத்து குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  1. இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக் – 29 ரக விமானம் பஞ்சாப் மாநிலம் நவன்ஷஹர் அருகே விழுந்து நொறுங்கியது.

தமிழகம்

  1. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக திறன் மேம்பாட்டு நிறுவன மாணவா்கள் மற்றும் பயிற்றுநர்கள் காலால் இயக்கும் கிருமிநாசினி தெளிப்பு கருவியை உருவாக்கி உள்ளனர். இதன்மூலம் நோய் தொற்று ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
  2. கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளுக்கு, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆகிய இடங்களில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை சோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது.
  1. ஊரடங்கு முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வர்த்தகம்

  1. மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு அறிவிப்பில்

அதிகமான நிதிப் பற்றாக்குறை, அதிகரிக்கும் அரசின் கடன், சமூகத் திட்டங்களுக்குக் குறைவான பங்களிப்பு, வலுவில்லாத கட்டமைப்பு, நிதித்துறையின் தேக்கம் போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பூஜ்ஜியமாக இருக்கும் என்று சர்வதேச தர நிறுவனமான மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

  • கரோனா வைரஸைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் உற்பத்தித்துறை, சேவைத்துறை முடங்கி, பொருளாதாரச் செயல்பாடு ஸ்தம்பித்துள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு நிதியாண்டில் பூஜ்ஜியமாக இருக்கும்.
  • ஆனால், 2012-22-ம் ஆண்டில் 6.6 சதவீதமாக அதிகரிக்கும்.
  • வேலையின்மை அதிகரிப்பு, புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மந்தம், உற்பத்திக் குறைவு, கிராமப்புற குடும்பங்களில் பணப் பற்றாக்குறை, நிதிச்சிக்கல் போன்றவற்றால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் தரம் குறைந்து வந்தது. போன்றவை வரும் காலத்தில் அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கும்.
  • கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவின் ரேட்டிங் பிஏஏ2 என்று இருந்தது. ஆனால் பொருளாதார வளர்ச்சிக்குறைவால் அந்த ரேட்டிங்கை மறுபரிசீலனை செய்ய வேண்டியது இருக்கிறது.
  • கரோனாவால் ஏற்பட்ட பொருளாதாரச் சீர்குலைவு, நிதிக் கொள்கை போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் இந்திய அரசால் நிதிப் பற்றாக்குறையை 3.5 சதவீதத்துக்குள் அடக்க முடியாது. பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகள், வருவாய்க் குறைவு போன்றவற்றால் நடப்பு நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை 5.5 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

இன்றய தினம்

  1. ஐரோப்பிய ஒன்றியம் – ஐரோப்பிய நாள்
  2. 1866 – கோபால கிருஷ்ண கோகலே இந்திய சுதந்திர போராட்ட வீரர், (இ.1915)
  3. 1933 – மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தைக் கைவிட்டார்.
PDF Download Here

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil ,current affairs tamil May 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs May 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs may 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

Leave a Comment