5th May 2020 Current Affairs in Tamil

5th May 2020 Current Affairs in Tamil

5th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

5th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  1. கோவிட் – 19 தொற்று  நோயால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, அணிசேரா இயக்க (நாம்) தொடர்புக் குழுவின் இணையதள மாநாடு  மே 4ம் தேதி அன்று மாலை நடைபெற்றது.
  • கோவிட்-19 தொற்றுக்கு எதிராக ஒன்றிணைவோம்’ என்ற கருத்தின் அடிப்படையில் ‘நாம்’ தொடர்புக் குழுவின் மாநாடு, அந்த இயக்கத்தின்    இப்போதைய தலைவரான அஜர் பைஜான் குடியரசின் அதிபர் எச்.இ.இதம் அலியேவ்வால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
  • இந்த மாநாட்டில் 30 நாடுகளின் தலைவர்கள், அரசுகள் மற்றும் பிற தலைவர்கள், குறிப்பாக ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்கள் ஆகியோருடன் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

இந்தியா

  1. புலம் பெயர் தொழிலாளர்களை அனுப்பும் ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணங்களை அனுப்பும் மாநிலங்களே கொடுக்க வேண்டும், அவர்கள் பெறும் மாநிலமோ தொழிலாளர்களிடமிருந்து டிக்கெட் கட்டணம் வசூலிக்கலாம், அல்லது இலவசமாகக் கூட அனுப்பலாம் ஆனால் ரயில்வேக்கு உரிய கட்டணம் செலுத்த வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் மாநிலங்களின் மீது பொறுப்பை சுமத்தியது.
  2. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின்படி கரோனாவின் தாக்கம் அதிகமாக இருக்கும் 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாகவும் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. கரோனா இல்லாத 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  3. கரோன வைரஸால் நாட்டில் மோசமாகப் பாதிக்கப்பட்ட டெல்லி உள்பட 9 மாநிலங்களில் இருக்கும் 20 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டு அந்த மாவட்டங்களுக்கு மத்திய சுகாதாரக் குழுவை மத்திய அரசு அனுப்புகிறது.
    • இந்தக் குழுவில் தேசிய நோய்க் கட்டுப்பாட்டு மையம் (என்சிடிசி), எய்ம்ஸ், ஜிப்மர், அனைத்திந்திய பொதுநலம் மற்றும் சுகாதார அமைப்பு ஆகியவற்றிலிருந்து இடம் பெறுவார்கள்.
    • இவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து நிலவரம், முன்னேற்றம் ஆகியவற்றைக் கண்டறிந்து மாநிலங்களின் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு அறிக்கைகளையும், பரிந்துரைகளையும் அனுப்புவார்கள்.
    • இந்த 9 மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் (12,974), குஜராத்தில் (5,428), டெல்லியில் (4,549), தமிழகத்தில் (3,023), மத்தியப் பிரதேசத்தில் (2,846), ராஜஸ்தானில் (2,886), மேற்கு வங்கத்தில் (963), உத்தரப் பிரதேசத்தில் (2,645), ஆந்திரப் பிரதேசத்தில் (1,583), தெலங்கானாவில் (1,082) நோயாளிகள் உள்ளனர்.
  1. நாட்டிலேயே முதல் முறையாக ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் தாக்குதல் அசாமில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் இதுவரை 306 கிராமங்களில் 2,500 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
    • கரோனா வைரஸுக்கும், ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூவுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அசாமில் கண்டறியப்பட்டது ஆப்பிரிக்க ஸ்வைன் ஃப்ளூ வைரஸ் என்பதை போபாலில் உள்ள தேசிய கால்நடை நோய்கள் உயர் ஆராய்ச்சி மையம் உறுதி செய்துள்ளது.
    • பன்றிகளின் இறைச்சி, எச்சில், ரத்தம், திசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவும்.
    • இதே வைரஸ் கடந்த பிப்ரவரி மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சீனாவின் ஜியாங் மாநிலத்தில் அதாவது அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோரத்தில் இருக்கும் பகுதியில் முதன்முதலில் பரவியது.
    • இந்த வைரஸால் மனிதர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்பதால் அச்சப்படத் தேவையில்லை.
  1. குரல், சுவாசம் ஆகியவற்றைக் கொண்டு கரோனோ தொற்றை முன்பரிசோதனை அடிப்படையில் கண்டுபிடிக்கும் புதிய முறையை பெங்களூரு இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.
    • காஸ்வாரா (Coswara) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவியை இணையம் மூலம் பயன்படுத்த முடியும்,ஸ்மார்ட்போன்கள் மூலமும் பயன்படுத்த முடியும்.
  • https://coswara.iisc.ac.in/ என்ற இணையதள முகவரியில் சில அடிப்படைத் தகவல்களைப் பகிர்ந்து பின் நமது குரலைப் பதிவுசெய்ய வேண்டும். அதன் மூலம் கரோனா தொற்றை முன்பரிசோதனை அடிப்படையில் கண்டுபிடிக்க முடியும். இதில் காசநோய், ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்கெனவே இருக்கும் பட்சத்தில் அதையும் இந்தக் கருவி கணக்கில் எடுத்துக்கொண்டே செயல்படும்.
  • இந்தச் சோதனைக்கு 5 நிமிடங்கள்தாம் ஆகும்.
  • இந்தச் சோதனை வெற்றி ஆகும் பட்சத்தில். குறைந்த விலையில் கரோனா முன்சோதனைக்கான ஒரு சிறந்த மாற்றாக இருக்கும்.
  1. சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருது
    • தேசிய  ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு பங்களிப்பவர்களுக்கான மிக உயரிய சிவில் விருதாக சர்தார் படேல் தேசிய ஒற்றுமை விருதை, சர்தார் வல்லபாய் படேலின் பெயரில் மத்திய அரசு நிறுவியது.
    • இந்தத் துறையில் எழுச்சியூட்டும் வகையில் குறிப்பிடத்தகுந்த பங்களித்திருக்கும் தனி நபர்கள், நிறுவனங்கள் அல்லது அமைப்புகளை அங்கீகரித்து, வலிமையான, ஒற்றுமையான இந்தியாவின் மதிப்பை வலுப்படுத்துவது இந்த விருதின் நோக்கமாகும்.
  2. (Saras Collection) சரஸ் சேகரிப்பு
  • மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ், வேளாண்மை மற்றும் விவசாய நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர், புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் அரசு மின்சந்தை (GeM) தளத்தில் “சரஸ் சேகரிப்பை” இன்று தொடங்கினார்.
  • GeM மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தீன்தயாள் அந்தியோதயா யோஜனா – தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் (DAY-NRLM) தனித்துவ முயற்சியான இந்த சரஸ் சேகரிப்புகிராமப்புற சுய உதவிக்குழுக்கள் (சுய உதவிக்குழுக்கள்) தயாரிக்கும் தினசரிப் பயன்பாட்டுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவும், கிராமப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள் சந்தை அணுகலுடன் மத்திய மாநில அரசு வாடிக்கையாளர்களை சென்றடைவதையும்நோக்கமாகக் கொண்டுள்ளது
  • இந்த முயற்சியின் கீழ், சுய உதவிக்குழு விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஐந்து தயாரிப்பு வகைகளில் பட்டியலிட முடியும், அதாவது

(i) கைவினைப்பொருள்கள்,

(ii) கைத்தறி மற்றும் ஜவுளி,

(iii) அலுவலக பொருள்கள்,

(iv) மளிகை, வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், மற்றும்

(v) தனிநபர் பாதுகாப்பு, சுகாதாரம்.

தமிழகம்

  1. கோவிட்-19 நெருக்கடி காலத்தில், தூய்மையான பாரதம் திட்டத்தின் கீழ் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்கெனவே ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதால், கழிவுகள் அகற்றுதல், அதைச் சார்ந்த பணிகளை நல்ல முறையில் திட்டமிடுதல், அவற்றை செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு Swachhata MOHUA செயலிஉதவியாக இருக்கின்றன.
  • Swachhata MOHUA செயலியின் உதவியால் மாநகராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பொது மக்களின் குறைகளை விரைவில் தீர்த்து வருகின்றன.
  • தூய்மையான பாரதம் (நகர்ப்புறம்) திட்டத்தின் வரம்புக்கு உள்பட்ட விஷயங்களில் பொது மக்களின் குறைதீர்வுக்கு ஏற்றவகையில் பிரபலமானதாக இந்தச் செயலி உள்ளது.
  • Swachhata MOUHA செயலியைப் பயன்படுத்துவதில் கோவை மாநகராட்சி முன்னிலையில் இருக்கிறது.
  • அனைத்து புகார்களையும், Swachhata செயலியில்  உள்ளதைப் போல, Swachh city – அறிவிப்புப் பகுதியில் கண்காணிக்க முடியும்.

வர்த்தகம்

  1. மைக்ரோஃபைனான்ஸ் நிறுவனம் என்பது குறைந்த வருமானம் உடையவர்களுக்கு நிதி சேவைகளை வழங்கும் ஒரு அமைப்பாகும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் தொடங்க இந்நிறுவனங்கள் உதவிக்கரம் நீட்டுகின்றன. இதில் காப்பீடு, வைப்புத்தொகை மற்றும் பிற சேவைகளும் வழங்கப்படுகிறது.
  2. கடன் வாங்குபவர்களுக்கு டெர்ம் லோன் எனப்படும் காலாண்டு உள்ளிட்ட கால கடன்கள் தொடர்பாக ரிசர்வ் வங்கி வழங்கிய மூன்று மாத கால அவகாசத்தை நீட்டிக்க கடன் வழங்குநர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர், மேலும், அதில் இருந்து விலகிய வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டுமே வசூல் செய்யப்படும்.
  3. தொழில்நுட்ப முதலீட்டில் முன்னணி நிறுவனமான சில்வர் லேக் நிறுவனம் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் ரூ.5,655.75 கோடி முதலீடு செய்கிறது.

இன்றய தினம்

  1. சர்வதேச நாடுகள் மருத்துவச்சிகள் நாள் (International Midwives Day)
  2. அல்பேனியா – மாவீரர் நாள்
  3. டென்மார்க் – விடுதலை நாள் (1945)
  4. எதியோப்பியா – விடுதலை நாள் (1941)
  5. நெதர்லாந்து – விடுதலை நாள் (1945).
  6. தென் கொரியா – சிறுவர் நாள்
PDF Download Here

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil 5th may 2020,current affairs tamil May 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs May 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs May 2020,current affairs today,current affairs may 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

Leave a Comment