18th May 2020 Current Affairs in Tamil

18th May 2020 Current Affairs in Tamil

18th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

18th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  1. இந்தியாவிடம் 22 தீவிரவாதிகளை மியான்மர், மணிப்பூர் மற்றும் அசாமில் உள்ள மாநில போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.மியான்மர் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 22 தீவிரவாதிகளும் மியான்மர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
  2. கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக இந்தியாவுக்கு செயற்கை சுவாசக் கருவிகள் வழங்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தாா்.

இந்தியா

  1. விஜய் மல்லையாவை இந்தியா கொண்டு வருவதற்கான வழக்கில் சிபிஐ அதிகாரி சுமன் குமார், தனி ஒரு ஆளாக வெற்றி கண்டுள்ளார். இந்த வழக்கில் விஜய் மல்லையாவின் மேல்முறையீட்டு மனு ரத்து செய்யப்பட்டு 28 நாட்களில் அவரை இங்கிலாந்தில் இருந்து வெளியேற்றி இந்தியா அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் எடுக்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ அதிகாரி சுமன் குமார்

  • 55 வயதாகும் இவர் தற்போது சிபிஐ கூடுதல் காவல் ஆணையராக இருக்கிறார். இவர் 23 வயதில் துணை காவல் ஆய்வாளராகப் பணியைத் தொடங்கினார். இவர் தனது திறம்மிக்க பணிக்காக குடியரசுத் தலைவர் விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 2015-ல் மல்லையா வழக்கில் இவர் ஈடுபடுகிறார்.
  1. வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆம்பன் புயல் தென்கிழக்காக நகர்ந்து அதிதீவிரப்புயலாக மாறவாய்ப்புள்ளது, வரும் 20-ம் தேதி மேற்கு வங்கக் கடற்கரை, வங்கதேச கடற்கரை பகுதி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.
  2. உ.பி.யில் 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து அவர்கள் இனி நடக்கவோ பிற வாகனங்களில் செல்லவோ தேவையில்லை, பேருந்துகளில் செல்லலாம் என யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதலே அமலானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
  3. கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வேலையிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்தக் கிராமத்துக்குச் சென்றால் அவர்களுக்கு வேலை வழங்கும் விதமாக மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடிஒதுக்கீடு செய்யப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார்.
  4. 5-வது கட்ட அறிவிப்புகளில் கல்விக்கான திட்டங்களை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
  • டிஜிட்டல் கல்விக்காக பிரதமர் இவித்யா திட்டம் உடனடியாகத் தொடங்கப்படும். ஆன்லைன் கல்விக்கு அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்படும்.
  • பிரதமர் இ-வித்யா டிஜிட்டல் கல்வி திட்டத்தில் அனைத்து வகுப்பினருக்கும் இணையவழி பாடப்புத்தகங்கள், க்யூஆர் கோட் மூலம் புத்தகங்களைப் பதிவிறக்கம் செய்தல் அறிமுகப்படுத்தப்படும். ஒரு தேசம், ஒரு டிஜிட்டல் தளம் என்று அறிமுகப்படுத்தப்படும்.
  • பள்ளிக் கல்விக்காக தற்போது 3 கல்விச் சேனல்கள் உள்ளன. இணையதள வசதி இல்லாத கிராமங்களில் உள்ள மாணவர்களுக்காக ஸ்வயம் பிரபா டிடிஎச் சேவை மூலம் பள்ளிக் கல்விக்காக கூடுதலாக 12 சேனல்கள் தொடங்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை ஒரு வகுப்புக்கு ஒரு சேனல் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
  • கல்வி நிபுணர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடல், கல்வித்தொடர்கள், ஸ்கைப் மூலம் நேரடியாகப் பாடங்களை நடத்தி உரையாட வசதி செய்யப்படும்.
  • கல்வி தொடர்பான வீடியோக்கள் அனைத்து மாணவர்களையும் சென்றடைவதற்கு வசதியாக டாடா , ஏர்டெல் டிடிஹெச் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • ஸ்வயம் பிரபா சேனல்களில் கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை நாள்தோறும் 4 மணிநேரம் ஒளிபரப்புவதற்கான நேரம் ஒதுக்குவதற்கு டிடிஹெச் ஆப்ரேட்டர்களுடன் ஒருங்கிணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
  • இ-பாடசாலைத் திட்டத்தில் புதிதாக 200 பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
  • செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மின்- பாடங்கள் (இ-புக்) உருவாக்கப்படும். பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்காகவும் சிறப்புப் பாடங்கள், வானொலி நிகழ்ச்சிகள், சமூக வானொலி ஏற்பாடு செய்யப்படும்.
  • வரும் 30-ம் தேதிக்குள் பிரதமர் இ-வித்யா திட்டத்தின் கீழ் 100 பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.
  • லாக்டவுன் நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து மத்திய அரசின் தீக்ஷா இணையதளத்தை 61 கோடி பேர் பயன்படுத்தியுள்ளனர்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள், குடும்பத்தினர் மனநலம், உணர்வுரீதியாக ஆரோக்கியமாக இருக்க மனோதர்பன் திட்டம் தொடங்கப்படும்.
  • பள்ளி, சிறுவயது மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய தேசிய பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்.
  • வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குழந்தையும் ஐந்தாம் வகுப்பில் கற்றல் நிலை, அதன் பலன்களை அடைவதை உறுதி செய்வதற்கான தேசிய அடித்தள எழுத்தறிவு மற்றும் எண் இயக்கம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உருவாக்கப்படும்.
  1. தொழில் செய்வதை எளிதாக்குதல் பிரிவில்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சம்ங்கள்:
  • திவால் நடவடிக்கையைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வரம்பு ரூ.1 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறு, குறு நிறுவனங்கள் காக்கப்படும்.
  • திவால் சட்டம் பிரிவு 240ன்படி, நடுத்தர, சிறு நிறுவனங்களுக்கான திவால் நடவடிக்கை விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
  • கரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்பு காரணமாக அடுத்த ஓராண்டுக்கு திவால் நடவடிக்கைப் பணிகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன.
  • கரோனா வைரஸ் லாக்டவுனால் கடனைத் திருப்பிச்செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் அதை வேண்டுமென்றே கடனைச் செலுத்தாத பட்டியலிலும், திவால் நடவடிக்கையிலும் சேர்க்கக்கூடாது.
  • கரோனா பாதிப்பிலிருந்து மீளக் கடன் பெறுவது, கடனைத் திருப்பிச் செலுத்தாதது, விலக்கு அளிப்பது ஆகியவற்றை முடிவு செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம்.
  • கம்பெனிச் சட்டத்தில் இருக்கும் சிறிய, நடைமுறைரீதியிலான குறைபாடுகள் குற்றப்பிரிவிலிருந்து நீக்கப்படும்.
  • கார்ப்பரேட் நிறுவனங்களின் சமூகக் கடமை அறிக்கை அளித்தல், நிறுவன இயக்குநர்கள் அறிக்கை தாக்கல் செய்தலில் காலதாமதம், தாக்கல் செய்வதில் குறைபாடுகள், ஆண்டு பொதுக்குழுக்கூட்டம் நடத்துவதில் தாமதம் ஆகியவை குற்றப்பிரிவிலிருந்து நீக்கப்படுகின்றன.
  • ஒத்திசைவுடன் பேசித் தீர்க்கக்கூடிய பெருவாரியான குற்றங்கள் உட்புற செயல்முறை தீரப்புக்கு மாற்றப்படும். ஒத்திசைவுடன் தீர்க்கக்கூடிய விவகாரங்களில் பிராந்திய இயக்குநர்களின் அதிகாரம் அதிகரிப்பு.
  • ஒத்திசைவுடன் தீர்க்கக்கூடிய 7 குற்றப்பிரிவுகள் கைவிடப்படுகின்றன. 5 பிரிவுகள் மட்டுமே கையாளப்படும்.
  1. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று, நடப்பு நிதியாண்டில் மாநிலங்களின் உள்நாட்டு மொத்த உற்பத்தியில் கடன் வாங்கும் அளவு 3 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக அதிகரித்து கூடுதலாக ரூ.4.28 லட்சம் கோடி பெறலாம், மத்திய அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு ரூ 46,038 கோடி ஏப்ரலில் முழுமையாக வழங்கப்பட்டது. வருவாய் பற்றாக்குறை மானியங்களாக மாநில அரசுகளுக்கு ஏப்ரல் , மே மாதத்தில் ரூ.12, 390 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
  • மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று ரிசர்வ் வங்கி, மாநிலங்கள் அரசு ஓவர் டிராப்ட் மூலம் கடன் பெறும் நாட்களை 14 லிருந்து 21 நாட்களாக உயர்த்தியுள்ளது.
  • நடப்பு நிதியாண்டில் மாநில அரசுகள் மாநில உள்நாட்டு உற்பத்தியின் மூலம் அதிகபட்சமாக ரூ.6.14 லட்சம் கோடி கடன் பெற முடியும். மாநிலங்கள் தங்கள் கடன் பெறும் தகுதியில் இதுவரை வெறும் 14 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. மீதமுள்ள 86 சதவீதத்தைப் பயன்படுத்தவில்லை.

தமிழகம்

  1. 4-ம் கட்ட ஊரடங்கை மே 31 வரை நீட்டித்துள்ள முதல்வர் பழனிசாமி, எவை எவைக்குத் தளர்வு என்பது குறித்து அறிவித்துள்ளார்.
  • அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் இ பாஸ் இல்லாமல் இயக்க தளர்வு அளிக்கப்படுகிறது.
  • ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்கு சென்றுவர இ பாஸ் பெற்றுச் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.
  • தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் – தற்போதுள்ள 50 சதவீதப் பணியாளர்களை 100 சதவீதப் பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
  1. மதுரை ரயில் நிலையத்திற்கு ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது என கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
  • தமிழகத்திலுள்ள முக்கிய ரயில் நிலையங்களில் மதுரையும் ஒன்று. பாண்டியன், வைகை, தேஜஸ் போன்ற சில ரயில்கள் மதுரையில் இருந்து இயக்கப்பட்டாலும், மேலும், திருவனந்தபுரம் கோட்டம் மற்றும் தென்மாவட்டங்களில் இருந்து இந்த ரயில் நிலையம் வழியாக தினமும் 90க்கும் மேற்பட்ட ரயில்கள் இயங்குகின்றன.
  • தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு நல்ல வருவாய் ஈட்டித் தருவதிலும் மதுரைகோட்டம் முதலிடத்தில் உள்ளது.
  • முறையான நேரத்தில் ரயில்களை இயக்குதல், சிக்னல்களை சிறப்பாகச் செயல்படுத்துதல், நிலையம், தொலைத்தொடர்புகளை நன்றாகப் பராமரித்தல், கிழக்கு, மேற்கு நுழைவு வாயில்களை அழகுபடுத்துதல், டிக்கெட் முன்பதிவு மற்றும் அதிக பார்சல்களைக் கையாளுவதில் கவனம், சுற்றுச்சூழல் பேணுதல், பயணிகளுக்கான பாதுகாப்பு உறுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தகம்

  1. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண (கட்டணங்கள் நிர்ணயித்தல் மற்றும் வசூல்)  விதிகள் 2008இல் திருத்தம் செய்து 2020 மே 15 தேதியிட்ட அறிவிக்கை GSR 298 E-ஐ வெளியிட்டுள்ளது.
    • FASTag ஒட்டாத அல்லது செல்லத்தகுந்த FASTag இல்லாத அல்லது செயல்பாட்டு நிலையில் இல்லாத FASTag இருந்து, சுங்கம் செலுத்த வேண்டிய சாவடிகளில் `FASTag’ வாகனங்களுக்கான பாதையில் நுழைந்தால், அந்த வாகனத்திற்கான இயல்பு கட்டணத்தைவிட இரு மடங்கு கட்டணம் வசூலிக்க இதில் வகை செய்யப்பட்டுள்ளது.
  2. தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டம் (MIDH)
  • தோட்டக்கலைத் துறையின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான திட்டம் (MIDH) என்பது பழங்கள், காய்கறிகளின் வேர்கள், கிழங்குப் பயிர்கள், காளான் இனங்கள், பூக்கள், நறுமணமுள்ள தாவரங்கள், தேங்காய், முந்திரி, கொக்கோ மற்றும் மூங்கில் ஆகியவற்றை உள்ளடக்கிய தோட்டக்கலைத் துறையின் முழுமையான வளர்ச்சிக்கான மைய நிதியுதவித் திட்டமாகும்.
  • நீலகிரி விவசாயிகள் அதிக அளவில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர், மேலும் அவர்கள் பெரும்பாலும் MIDH திட்டத்தின் மூலம் பயனடைகிறார்கள்.

3. இ–நாம் இணைய தளம் 

  • இ–நாம் இணைய தளம்  மூலம், விவசாயி நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வாடிக்கையாளர் பெறும் இறுதி விலையைக் காண முடியும்,
  • இதனால் அவர் தனது தயாரிப்புகளின் மதிப்பை அறிந்து கொள்ளவும், சரியான விலையைக் கோரவும் முடியும். இதனால் இ – நாம் இணைய தளம் விவசாயிகளுக்கு உற்பத்திக்கான சரியான விலையைப் பெற அதிகாரம் அளிக்க முயற்சிக்கிறது.
  • தரமான காய்கறிகளையும் கீரைகளையும் வளர்த்த விவசாயிகளால் விற்பனையாளர்களின் சிக்கலான சந்தைப்படுத்தல் நடைமுறைகள் காரணமாக சாகுபடியின் விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இதன் விளைவாக, பொருளுக்குத் தகுதியான விலையை விவசாயி பெறாத நிலையில்,நுகர்வோரும் அதிக விலை கொடுக்க வேண்டி இருந்தது. மேலும், இ – நாம் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளம் விவசாயிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இன்றய தினம்

  1. அனைத்துலக அருங்காட்சியக நாள்
  2. போர்க்குற்ற நாள் (இலங்கை)
  3. 2010 – நாடு கடந்த தமிழீழ அரசு நிறுவப்பட்டது.
PDF Download Here

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil 18 may 2020,current affairs tamil May 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs May 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs may 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

Leave a Comment