13th May 2020 Current Affairs in Tamil

13th May 2020 Current Affairs in Tamil

13th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

13th May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

  5. இன்றய தினம்

உலகம்

  1. இந்தோனேசியாவில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தினக்கூலி தொழிலாளர்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் ஆதரவற்றோருக்கு ஏ.டி.எம். மூலம் ஏழைகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.
  2. உலக வங்கியின் கல்வித்துறை நிபுணர்கள் குழு, ‘கொரோனா பெருந்தொற்று-கல்வியில் ஏற்படுத்திய அதிர்ச்சி’ என்ற தலைப்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.
  • கொரோனா வைரஸ் பரவலுக்கு முன்பே, 25 கோடியே 80 லட்சம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் பள்ளியில் சேராமல் இருந்தனர்.
  1. லடாக்கின் பாங்காங் ஏரி பகுதியில் இந்திய – சீன ராணுவ வீரர்களுக்கு இடையே கடந்த வாரம் சிறிய மோதல் ஏற்பட்டது.
    • இந்தியா – சீனா எல்லையை ஒட்டியுள்ள லடாக் யூனியன் பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் சீன ஹெலிகாப்டர்கள் பறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
    • இந்தியவிமானப்படை உஷார்படுத்தப்பட்டு, விமானப்படையின் சூ- 30 ரக போர் விமானங்கள் அப்பகுதிக்கு விரைந்தன.
    • சீன ஹெலிகாப்டர்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து செல்வது வழக்கம்தான் என்றும் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்களும் ரோந்துப் பணியில் ஈடுபடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

4. பாகிஸ்தான் ஊடகங்கள், “குழந்தை வன்கொடுமை, குடும்ப வன்முறை, கடத்தல், வல்லுறவு ஆகிய குற்றங்கள் ஊரடங்குக்குப் பிறகு அதிக அளவில் நடைபெற்றுள்ளன. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மார்ச் மாதத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை 200 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா

  1. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் விவசாயப் பொருட்களை சந்தைக்கு கொண்டு சென்று விற்பனை செய்வதில் சிக்கல் இருந்து வருகிறது. இதையடுத்து விவசாயிகள் விளைவித்தப் பொருட்களை ஆன்லைன் மூலமே விற்பனை செய்வதற்காக 177 விற்பனைக் கூடங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
    • இந்த விற்பனைக்கூடங்களில் ஆன்லைனில் ஏலம் நடைபெற்று பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி விவசாயிகளுக்கு பொருட்ளுக்கான பணம் வழங்கப்படுகிறது.
  2. அடல் பென்ஷன் யோஜனா திட்டம் (APY) – 5 ஆண்டுகள் நிறைவு

    • பிரதமர் நரேந்திர மோடியால் 9 மே 2015 அன்று இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
    • இத்திட்டத்தின் நோக்கம் – 60 வயதுக்குப் பின்னர், குறைந்தபட்ச ஓய்வூதியம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, குறிப்பாக அமைப்பு சாராத பிரிவினைச் சார்ந்த முறைசாராத தொழிலாளர்களுக்கு அவர்களின் வயது முதிர்ந்த காலத்தில் வருவாய்ப் பாதுகாப்பை அளிக்க வேண்டும்.
    • நாட்டின் அனைத்து மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டம் விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சேர்ந்து உள்ளவர்களின் ஆண் பெண் விகிதம் 57:43 என்று உள்ளது.
    • 9 மே 2020 வரையிலான காலத்தில் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ளவர்கள் எண்ணிக்கை 2,23,54,028. இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் இரண்டு ஆண்டுகளில் 50 லட்சம் பேர் பதிவு செய்து கொள்ளப்பட்டனர்.
    • வங்கியில் கணக்கு வைத்திருக்கும் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள எந்த ஒரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் சேரலாம்.
    • இத்திட்டத்தில் மூன்று தனித்துவமான நன்மைகள் உள்ளன.
      • முதலாவதாக, 60 வயதை அடையும் போது ஆயிரம் ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையிலான குறைந்தபட்ச ஓய்வூதியம் அரசால், உறுதிப்படுத்தப்படுகிறது.
      • இரண்டாவதாக, இந்த ஓய்வூதியம் சந்தாதாரரின் வாழ் நாளுக்குப் பிறகு அவரது துணைவருக்குக் கிடைக்கும்.
      • இறுதியாக அவரும் அவரது துணை ஆகிய இருவருமே இறக்கும் பட்சத்தில், அவர்களால் நியமிக்கப்பட்டவருக்கு (nominee) மொத்த ஓய்வூதியத் தொகையும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
  3. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மகாராஷ்டிர மாநிலத்தில் 50% கைதிகளுக்கு ஜாமீன்.
  4. ஆரோக்கிய சேது செயலியின் தகவலை முறைகேடாக பயன்படுத்தினால் சிறை- புதிய விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு.

     

    1. ஆரோக்கிய சேது செயலியின் தகவல்களை தவறாக பயன்படுத்துவோர் மீது, பேரிடர் மேலாண்மை சட்டம், 2005-ன் பிரிவு 51 முதல் 60 வரை மற்றும் பிற சட்ட விதிகளின் கீழ் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, அபராதம், சிறைத்தண் டனை விதிக்கப்படும்.
    2. தனிநபரின் அந்தரங்க தகவல்களை தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
    3. இதன்படி, பாதிக்கப்படாத நபர்கள் தங்களைப் பற்றிய தகவலை செயலியில் இருந்து 30 நாட்களில் நீக்க முடியும்.
    4. பரிசோதனை செய்யப்பட்டவர் கள் 45 நாட்களிலும், சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்ட நபர்கள் 60 நாட்களிலும் தங்களைப் பற்றிய தகவலை இந்த செயலியின் பதிவிலிருந்து நீக்கி விடலாம்.
    5. மேலும் 6 மாதங்களுக்கு மேல் இந்த செயலியில் தகவல்களை வைத்திருக்க தடை விதிக்கப்படுகிறது.

தமிழகம்

  1. வீட்டிலிருந்தே செயலி மூலம் மருத்துவ உதவி, ஆலோசனை – சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி – GCC Vidmed செயலி

  • பெருநகர சென்னை மாநகராட்சியின் கரோனா கண்காணிப்புச செயலியின் (Corona Monitoring App) மூலம் காய்ச்சல் குறித்து தகவல் தெரிவிக்கும் நபர்களுக்கு இந்த தொலைபேசி ஆலோசனை மையத்திலிருந்து தொடர்பு கொண்டு தேவைக்கேற்ப மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
  • இதனைத் தொடர்ந்து தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் சாதாரண சிகிச்சைகளுக்காக மருத்துவரையோ (அ) மருத்துவமனைகளுக்கோ செல்வதற்கு ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டும்கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் வகையிலும் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தனுஷ் ஹெல்த்கேர் நிறுவனத்துடன் இணைந்து டெலி மெடிசன் மூலம் சிகிச்சை அளிக்க GCC Vidmed என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

2. உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மரச்சிற்பங்களுக்கு புவிசார் குறியீடு

தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு

  • தஞ்சாவூர் நெட்டி என்பது தண்ணீரில் விளையும் ஒரு வித செடி வகையைச் சேர்ந்தது. .
  • இதனுடைய நடுபாகம் தாமரை தண்டு போன்று நீளமாகவும், மேல்பகுதி சிறு சிறு கிளைகளாகவும் இருக்கும்.
  • இந்த நெட்டி டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் வரை கிடைக்கும்.
  • இந்த நெட்டியைப் பறித்து வெயிலில் உலர்த்தி, பதப்படுத்தி அதில் கைவினைப்பொருட்கள், பரிசுப் பொருட்கள் செய்யப்படும்.
  • தமிழர்களின் தமிழ்ப் பண்பாட்டின் முக்கிய விழாவான மாட்டுப்பொங்கலின்போது மாடுகளுக்குப் பயன்படுத்தும் மாலையினைச் செய்வதற்கு இந்த நெட்டி பயன்படுத்தப்படுகிறது. எனவே, இதன் பயன்பாடு என்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது தமிழர்களின் வாழ்வோடு பிணைக்கப்பட்டு வருகிறது.
  • இதனோடு வேறு எந்தப் பொருட்களையும் சேர்க்காமல் நெட்டியை மட்டுமே கொண்டு செய்யப்படுவதும், எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதன் வண்ணம் தன்மை மாறாமல் இருப்பதும் இதன் சிறப்பாகும்.
  • முற்றிலும் கைகளாலேயே செய்யப்படும் இந்த கைவினைப் பொருட்களுக்கு எந்தவித இயந்திர உதவியும் தேவையில்லை.
  • இத்தகைய வேலைப்பாட்டின் சிறப்பாகத் திகழ்வது தஞ்சாவூர் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரை, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை என மட்டுமின்றி இயற்கை உருவ அமைப்புகள் உருவாக்கப்பட்டு அனைவரையும் கவர்ந்து இருக்கிறது.

அரும்பாவூர் மரச் சிற்பம்

  • பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் என்ற கிராமத்தில் தயாரிக்கப்படும் மரச்சிற்பம் உலகப் புகழ் பெற்றது. இந்த மரச்சிற்பத்துக்கு 250 வருடங்களுக்கு முன்பே பழமையான வரலாற்றுச் சிறப்பு உள்ளது.
  • இந்தப் பகுதியில் வாழும் போயர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் இக்கலையில் சிறந்து விளங்குகின்றனர். இவர்களின் பிரதான தொழில் தேர் செய்யும் தொழிலாக அமைந்திருக்கிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், அவிநாசி, வடபழனி, ஆவுடையார்கோயில், விராலிமலை, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் என தமிழகத்தின் பல பிரசித்தி பெற்ற கோயில்களில் தேர்களைச் செய்தவர்கள் இந்த தழுதாலை மரச்சிற்பிகளே.
  • தேரின் உயரத்திற்கு ஏற்ப ஐந்து முதல் ஏழு நபர்கள் வரை அந்தப் பகுதிக்கே சென்று மாதக்கணக்கில் தங்கிப் பணி முடித்து வெள்ளோட்டம் பார்த்துவிட்டு ஊர் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயில் கொடிமரம் செய்வதிலும் இதே நடைமுறையைக் கையாளுகின்றனர்.
  • அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் மதுரை ஆகிய ஊர்களில் உள்ள பழமையான தேர்கள் அனைத்தும் இவர்களது முன்னோர்களால் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இத்தகைய மர வேலைப்பாட்டுக்கு தேக்கு, மாவிலகை, பூவாகம், வேம்பு, மா, அத்தி முதலிய மரங்களே பயன்படுத்தப்படுகின்றன.
  • அனைத்துவிதமான இறை உருவங்கள், கொடிமரம், வெள்ளெருக்கில் செய்யப்படும் விநாயகர், ராமர் பாதம் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை. இறை உருவம் மற்றும் தேர் வேலைகள் செய்யும் போது இவர்கள் அசைவ உணவுகளைத் தவிர்த்து விரதமிருந்து இவற்றை மேற்கொள்கின்றனர். இத்தகைய சிற்பங்கள் ஒரு அடி முதல் 12 அடி வரை செய்யப்படுகின்றன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா போன்ற அயல் நாட்டினரால் பெரிதும் விரும்பி வாங்கப்படுகின்றன.
  • இவை அனைத்தும் சிற்பசாஸ்திரம் முறையிலேயே தயார் செய்யப்படுகின்றன. சிற்பங்கள் செய்வதற்கு உளி, சுத்தியல் முதலிய உபகரணங்களைப் பயன்படுத்தி முற்றிலும் கைவினைப் பொருட்களாக உற்பத்தி செய்யப்படுகின்றன.

வர்த்தகம்

  1. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் Champions.gov.in என்ற சாம்பியன்ஸ் இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.
  • சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்பது உருவாக்கம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பதற்கு நவீன நடைமுறைகளை இணக்கத்துடன் பயன்படுத்தி தேசத்தை வலுப்படுத்துவது என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. எனவே இந்த நடைமுறை சாம்பியன்ஸ் (CHAMPIONS) என்று குறிப்பிடப் படுகிறது.
  • சிறிய தொழில் பிரிவுகளின் குறைகளைத் தீர்த்து வைத்து, ஊக்குவிப்பு, ஆதரவு, உதவிகள் அளித்து, கைபிடித்துத் தூக்கிவிடும் செயல்பாடுகள் மூலம் அவற்றைப் பெரிய நிறுவனங்களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு இந்த இணையதளம் செயல்படும். குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சகம் கையாளும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஒரே இடத்தில் தீர்வு காணும் இணையதளமாக இது இருக்கும்.

    இன்றய தினம்

    1. 1952 – இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
    2. 1960உலகின் ஏழாவது உயர மலையான தவுளகிரியின் உச்சியை சுவிட்சர்லாந்து மலையேறிகள் இருவர் முதன் முதலில் அடைந்தனர்.
PDF Download Here

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

 

Leave a Comment