10th May 2020 Current Affairs in Tamil
10th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.
Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.
VETRIPADI Daily Newsletter
வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!
Daily Current affairs for Competitive
Exams ( UPSC, TNPSC, SSC)
10th May 2020
TABLE OF CONTENTS
-
தமிழ்நாடு
-
வர்த்தகம்
-
உலகம்
-
இன்றய தினம்
தமிழ்நாடு
-
ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழு
தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தலைமையில் 24 பேர் கொண்ட உயர்மட்டக் குழு அமைத்துள்ளது தமிழக அரசு.
- ஊரடங்கு காலத்தால் பின்னடைவை சந்தித்திருக்கும் தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
- தமிழக பொருளாதாரத்தை சீரமைக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து 3 மாத காலத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, சிறு மற்றும் குறு தொழில்களில் ஏற்பட்ட தாக்கம் மற்றும், நிலைமையை சீராக்க தற்போதிருக்கும் வாய்ப்புகள் குறித்தும் இந்த நிபுணர்கள் குழு ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது.
- தமிழகத்தில் நிகழாண்டில் 20 சதவீதம் கூடுதல் நெல் விளைச்சல் அடைந்துள்ளதாக தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
உலகம்
- உலகில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலிகளில் 7-வது இடத்தை ஆரோக்கிய சேது செயலி பெற்றுள்ளது.
- கூகுள் பிளே மூலம் பதிவிறக்கம் செய் யப்பட்ட செயலிகள் பட்டியலில் 5-ம் இடத்தைப் பெற்றுள்ளது.
- ஜூம், டிக்டாக், பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் ஆகியவை முதல் 6 இடங்களில் உள்ள செயலிகள் ஆகும்.
- கரோனா வைரஸ் தொற்று பற்றிய விழிப்புணர்வு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நமக்கு அருகாமையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளார்களா என்பது குறித்த தகவல்களைமக்கள் தெரிந்து கொள்வதற்காக ஆரோக்கிய சேது செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
வர்த்தகம்
- பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ),கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தனதுவாடிக்கையாளர்களுக்கு உடனடியாக ரூ.5 லட்சம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. அவசர கால கடன் (எமர்ஜென்சி லோன் ஸ்கீம்) என்ற பெயரிலான இந்த கடன் 45 நிமிடத்தில் வழங்கப்படும்.
- கரோனா தொற்று காரணமாக, சில நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பதிவு செய்தல், அறிவிக்கை செய்தலுக்கான புதிய நடைமுறைகள் அமலாக்கத்தை 2020 அக்டோபர் 1 ஆம் தேதி வரையில் ஒத்திவைக்க சி.பி.டி.டி. முடிவு செய்துள்ளது.
- புதிய நடைமுறைகளை வரும் ஜூன் 1 ஆம் தேதியில் இருந்து அமல் செய்வதில் உள்ள பிரச்சினைகள் குறித்து நிதியமைச்சகத்துக்கு நிறைய முறையீடுகள் வந்தன.
- வருமான வரிச் சட்டம் 1961ன் 10(23C), 12AA, 35 மற்றும் 80G பிரிவுகளின் கீழ் அங்கீகாரம், பதிவு செய்தல், அறிவிக்கை செய்யப்பட்ட நிறுவனங்கள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து 3 மாத காலத்துக்குள் தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும்.
- அதாவது 2020 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், புதிய நிறுவனங்களுக்கான அங்கீகாரம், பதிவு செய்தல், அறிவிக்கை செய்தலுக்கான திருத்தப்பட்ட நடைமுறைகள் 2020 அக்டோபர் 1 ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வரும். இதற்குரிய சட்ட திருத்தங்கள், வரும் காலத்தில் உருவாக்கப்படும்.
இன்றய தினம்
- 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
- 1908 – அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
- 1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
Download Link Click Here