முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிப்பது எப்படி?
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன, மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை வழங்கும் நோக்கத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் 1200க்கும் மேற்பட்ட சிகிச்சைகளுக்கு உதவி கிடைக்கிறது. கடைசியாக 2020 ஜூன் முதல் கொரோனா சிகிச்சைக்கான செலவும் இக்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனைகளுக்கான கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டன. ஒரு குடும்பத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கிறது. இத்திட்டத்தில் பதிவு செய்வது …