பொறியியல், பி.டெக்(BE, BTech) படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை அறிவிப்பு

TAMIL NADU ENGINEERING ADMISSIONS (TNEA) 2021 Registration Started

தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கு நாளை முதல் ஆகஸ்ட் 24 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஜூலை 26 முதல் (நாளை) ஆகஸ்ட் 24-ம் தேதி வரை, அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

Tamilnadu Engineering College Admissions 2021 Announced by Tamilnadu directorate of technical education (TNDTE) for government and Self-finance Engineering college. This TNEA 2021 Online Application form will be available on the official website from 26.07.2021 to 24.08.2021.

பொறியியல், பி.டெக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை

பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைப்பு பெற்றுள்ள சுமார் 500 பொறியியல் கல்லூரிகளில் நடத்தப்படும் பி.இ, பி.டெக் உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது.

அதன்படி, பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு நாளை (ஜூலை 26) முதல் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 24 வரையில் விண்ணப்பிக்கலாம்.

மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக பொறியியல் கல்லூரிகள், பாலி டெக்னிக் கல்லூரிகளில் உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட படிப்புக்கான விண்ணப்பங்கள் வரப்பெற்ற பிறகு மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் ஆகஸ்ட் 25ம் தேதி வெளியிடப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து செப்டம்பர் 4ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

Official Website : www.tneaonline.org அல்லது www.tndte.gov.in

  • ஆக.25-ம் தேதி ரேண்டம் எண் வெளியாகும்.
  • செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
  • செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறும்.
  • அக். 20-ம் தேதிக்குள் கலந்தாய்வை முடித்து மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என, தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
  • செப்டம்பர் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை சிறப்பு பிரிவு மாணவர்களுகான கவுன்சலிங்  நடக்கும்
  • செப்டம்பர் 14ம் தேதி முதல் அக்டோபர் 16ம் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது.
  • அக்டோபர் 12ம் தேதி முதல் 16ம் தேதி வரை துணை கவுன்சலிங்  நடத்தப்படும்.
  • அக்டோபர் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை ஆதிதிராவிடர், அருந்ததியர் பிரிவுக்கான ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களில் ஆதிதிராவிட வகுப்பினர் சேர்வதற்கான கவுன்சலிங்  நடக்கும்.

இதையடுத்து, இதற்கான  சேர்க்கை விண்ணப்பங்கள் பெறுவது முதல் கவுன்சலிங் நடத்தி இட ஒதுக்கீடு ஆணைகள் வழங்குவது அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்த தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.

Documents Required for TNEA Online Application Form 2021

பதிவு முடிந்ததும் பதிவேற்ற பின்வரும் சான்றிதழ்கள் தேவை

  • 10thMark Sheet
  • 12th Mark Sheet
  •  Transfer Certificate
  •  Community Certificate Card for ST, SC, SCA, MBC & DNC, BC, and BCM
  • First Graduate Certificate – If applicable

Application Fees

Name of the Category Fees
For General, UR, BC Category  Candidates Rs.500/-
For SC/ ST/ SCA Candidates Rs.250/-
For special reservation Category Rs.100/-

Important Dates

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி 26.07.2021    
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 24.08.2021
ரேண்டம் எண்ணை ஒதுக்குதல் 25.08.2021
தரவரிசை பட்டியலின் வெளியீடு 04.09.2021
சிறப்பு இட ஒதுக்கீடு வகைகளுக்கான ஆலோசனை (ஆன்லைன்) 07.09.2021 to 11.09.2021
ஆன்லைன் ஆலோசனையின் ஆரம்பம் – கல்வி மற்றும் தொழில்சார் 14.09.2021 to 04.10.2021
துணை ஆலோசனை (ஆன்லைன்) 12.10.2021 to 16.10.2021

Notification pdf

Notification pdf (English)
Notification pdf (தமிழ்)

அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 2021

அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை
தமிழகத்தில்  இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.org மற்றும் www. tngasa.in  என்ற இணையதள முவகரிகளில் பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் கல்லூரி உதவி மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். இளநிலை பட்ட படிப்புக்கு விண்ணப்ப கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2. எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.

விண்ணப்ப கட்டணம் மற்றும் பதிவு கட்டணங்களை இணையதளம் மூலம் செலுத்தலாம். அவ்வாறு செலுத்த முடியாதவர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் ‘இயக்குநர், கல்லூரி கல்வி இயக்ககம், சென்னை-6’ என்ற பெயரில் 26ம் தேதியோ அல்லது அதற்கு பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 

Tags:

tnea 2021 registration date,tnea 2021 registration last date,tnea 2021 registration online,tnea counselling registration 2021,tnea registration form 2021,registration for tnea 2021,is tnea 2021 registration over,is tnea 2021 registration started,tamil nadu engineering college admission 2021,tamil nadu engineering admission,tamil nadu engineering admissions,tamilnadu engineering college admission,,

Leave a Comment