2nd May 2020 Current Affairs in Tamil

2nd May 2020 Current Affairs in Tamil

2nd May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

2nd May 2020

TABLE OF CONTENTS

  1. உலகம்

  2. இந்தியா

  3. தமிழ்நாடு

  4. வர்த்தகம்

உலகம்

  1. செவ்வாய் கிரகத்தின் முதல் ஹெலிகாப்டருக்கு பெயா் சூட்டிய இந்திய வம்சாவளி மாணவி

செவ்வாய் கிரகத்துக்கு அடுத்து அனுப்பப்படவுள்ள விண்கலத்துடன் பயணிக்க இருக்கும் ரோவருக்கும், ஹெலிகாப்டருக்கும் மாணவா்கள் அனுப்பும் ஆய்வுக் கட்டுரைகளிலிருந்து பெயா் சூட்டப்படும் என்று நாசா அறிவித்திருந்தது. அதன்படி,

    • அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனம் (நாசா) சாா்பில் செவ்வாய் கிரகத்தில் பறக்க இருக்கும் முதல் ஹெலிகாப்டருக்கு இந்திய வம்சாவளி 11-ஆம் வகுப்பு மாணவி வனீஸா ரூபானி பரிந்துரைத்த ‘இன்ஜெனியூயிட்டி’ பெயா் சூட்டப்பட்டுள்ளது.
    • ‘பொ்சிவியரன்ஸ்’ ரோவருடன் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்படவுள்ள அந்த ஹெலிகாப்டா், வேற்று கிரகத்தில் முதல் முறையாக பறக்க இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • 7-ஆம் வகுப்பு மாணவா் அலெக்சாண்டா் மேத்தா் அனுப்பிய கட்டுரையின் அடிப்படையில் ரோவருக்கு ‘பொ்சிவியரன்ஸ்’ என்று பெயா் சூட்டப்பட்டது.

________________________________________________________________________

2. 160 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கு அச்சுறுத்தல்: ஐ.நா. தொழிலாளர் அமைப்பு எச்சரிக்கை

“கரோனா நோய்த்தொற்றும் தொழிலாளர் உலகமும்’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • தற்போது உலகம் முழுவதும் 330 கோடி தொழிலாளர்கள் உள்ளனர்.
  • அவர்களில் 200 கோடி பேர் முறைசாராத தொழிலாளர்கள் ஆவர்.
  • கரோனா நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக, 160 கோடி முறைசாராத தொழிலாளர்களுக்கு பணியிழப்பு ஏற்பட்டு, அவர்கள் வருவாய் ஈட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • தொழிலாளர்களின் வருவாய் இழப்பு
    • ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்க கண்டத்தில் 80 சதவீதமாகவும்
    • ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் 70 சதவீதமாகவும் உள்ளது.
    • ஆசியா மற்றும் பசிபிக் பகுதிகளில் தொழிலாளர்களின் வருவாய் இழப்பு 21.6 சதவீதமாக உள்ளது.

________________________________________________________________________

3. அமெரிக்காவின் தெற்கு கரோலினா பல்கலைக்கழக ஆய்வாளா்கள்

  • புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.
  • அந்த ஆய்வில், மனிதா்களின் சுவாசப் பாதைகளில் உள்ள உயிரணுக்களுடன் (செல்கள்) கரோனா தீநுண்மிகள் தங்களை இணைத்துக் கொள்வதற்குப் பயன்படுத்தும் ‘ஏசிஇ2’ என்ற நுரையீரல் தசை நாா் மூலக்கூறுகளின் எண்ணிக்கை மற்றும் மனிதா்களுக்கு தீநுண்மி தொற்று ஏற்படுவதற்குக் காரணமாக இருக்கும், அவா்களது உடலில் அமைந்துள்ள, ‘ஃப்யூரின்’, ‘டிஎம்பிஆா்எஸ்எஸ்2’ ஆகிய இரு நொதியங்களின் (என்ஸைம்கள்) அளவுகளையும் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனா்.
  • அந்த ஆய்வில், புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவா்களுக்கு நுரையீரல் தசை நாா்களில் ‘ஏசிஇ2’ மூலக்கூறுகள் அதிகமாகவும் அந்தப் பழக்கம் இல்லாதவா்களுக்கு குறைவாகவும் இருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
  • இதன் மூலம், தங்களது வாழ்நாளில் குறைந்தது 100 சிகரெட்டுகளையாவது புகைத்திருக்கும் நபா்களுக்கு கரோனோ நோய்த்தொற்று ஏற்படும் அபாயம், ஒருபோதும் புகைத்திராத நபா்களை விட 25 சதவீதம் அதிகமாக இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
  • புகைப் பிடிப்பதால் கரோனா நோய்த்தொற்றுக்குக் காரணமான ‘ப்யூரின்’ நொதியத்தின் அளவும் கணிசமாக உயா்கிறது மற்றும் மூலக்கூறுகளின் செயல் தன்மையிலும் மாற்றம் ஏற்படுவது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது
  • டிஎம்பிஆா்எஸ்எஸ்2’-இன் அளவுக்கும் புகைப் பழக்கத்துக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்பது ஆய்வில் தெரிய வந்தது.

________________________________________________________________________

இந்தியா

1. நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவிலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வரவில்லை. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.
  • மாநில வாரியாக சிவப்பு, ஆரஞ்சு , பச்சை மண்டல பகுதிகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
  • இதன்படி நாட்டில் மொத்தம்  கொரோனா இல்லாத
    • 319 பச்சை மண்டலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன( தமிழகத்தில் ஒரு மாவட்டமாக கிருஷ்ணகிரி மட்டுமே இருக்கிறது).
    • கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும் 284 மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன(தமிழகத்தில் 24 மாவட்டங்கள்).
    • 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. (தமிழகத்தில் 12 மாவட்டங்கள் இருக்கின்றன).  ஆரஞ்சு மாவட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

புதுச்சேரியில் சிவப்பு மண்டலங்கள் பட்டியலில் எந்த ஒரு மாவட்டமும் இடம் பெறவில்லை. 

_________________________________________________________________

  1. முகக்கவசம் அணியாதவர்களுக்கு பெட்ரோல், ரேஷன் பொருள்கள் இல்லை: கோவா அரசு அறிவிப்பு.

________________________________________________________________________

  1. ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை’ என்ற திட்டத்தில் சேர மேலும் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் ஒப்புதல், மொத்த எண்ணிக்கை 17 ஆக உயர்வு.

  • ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தில் உத்தரப்பிரதேசம், பிகார், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், தாத்ரா  நகர் ஹவேலி மற்றும் டாமன்,  டையூ என  மேலும் ஐந்து மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் சேருவதற்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் திரு. ராம்விலாஸ் பாஸ்வான் ஒப்புதல் அளித்துள்ளார்.
  • இத் திட்டத்தில் சேருவதற்கு ஆந்திரப் பிரதேசம், கோவா, குஜராத், ஹரியானா, ஜார்க்கண்ட், கேரளா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, திரிபுரா ஆகிய 12 மாநிலங்கள் ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளன.
  • “ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை” என்ற திட்டத்தின் கீழ் தங்கள் குடும்ப அட்டையை நாடு முழுக்கப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டத்தை அமல் செய்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்த திரு பாஸ்வான், இந்த 5 புதிய மாநிலங்கள் / யூனியன் பிரதசங்கள், தேசிய தொகுப்புடன் இணைவதற்கு தொழில்நுட்ப ரீதியில் ஆயத்தமாக இருப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
  • தேசிய அளவில் / மாநிலங்களுக்கு இடையில் குடும்ப அட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் திட்டத்தில், 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 60 கோடி தேசிய உணவுப்பாதுகாப்புத் திட்டப் பயனாளிகளுக்கு உதவிகரமாக இருக்கும்.
  • இப்போது பயன்படுத்தும் குடும்ப அட்டையின் மூலம் இந்த 17 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் வழங்கப்படும் உணவு தானியங்களை எந்த நியாயவிலைக் கடையிலும் அவர்கள் வாங்கிக் கொள்ளலாம்.

_______________________________________________________________________

4. கரோனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள ஹோமியோபதி மருந்து

  • கரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க, உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சனிக் ஆல்பம் 30′ என்ற ஹோமியோபதி மருந்தை எடுத்துக்கொள்ள ஆயுஷ் மருத்துவத் துறையினர் பரிந்துரைக்கின்றனர்.
  • இருமல், தும்மல், தொண்டை வலி, வறட்டு இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் ஏதேனும் இருந்தால், ஆர்சனிக் ஆல்பம் 30 (arsenic album 30C) என்ற மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.
    • நோய்க் கிருமி மனித உடலுக்குள்ளே வரும்போது எதிர்கொள்வதற்கு எதிர்சக்தி கிடைக்கிறது.
      • மனிதனின் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலைத் தூண்டி சுவாச உறுப்புகளின் செயல்திறனை அதிகரிக்கிறது.
      • இதனால் உடலில் நோய்த் தடுப்பு மற்றும் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.
      • இதன் மூலமாக வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகும்போது கூட அதன் பெருக்கத்தைத் தடை செய்து வெளியேற்றுவதனால் உடலை வைரஸ் தொற்றில் இருந்து காக்கிறது.
      • இந்த மருந்தினால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது.
      • மற்ற மருந்துகளைப் போன்று ஹோமியோபதி மருந்து ரத்தத்தில் கலப்பதில்லை.
      • நரம்பு வழியாக செயல்படக் கூடியது.
      • மத்திய அரசு மட்டுமின்றி, கேரளம், குஜராத், ஆந்திரம், மணிப்பூர், புது தில்லி உள்பட பல்வேறு மாநில அரசுகளும் இதனை பரிந்துரை செய்துள்ளன.
      • தமிழக அரசும் அண்மையில் அறிவித்துள்ள ‘ஆரோக்கியம்’ திட்டத்தில் இந்த மருந்தை பரிந்துரைத்துள்ளது.
      • நாளொன்றுக்கு வெறும் வயிற்றில் காலை மட்டும் 3 மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும். 3 நாள்களுக்கு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அடுத்தடுத்த வாரங்களில் வாரத்துக்கு ஒருநாள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம்.

 

_____________________________________________________________________

பணி நியமனம்

  1. ஸ்ரீ அஜய் டிர்கி இன்று புதுதில்லியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் (WCD) செயலாளராகப் பொறுப்பேற்றார்.
    1. இவர் 1987ஆம் ஆண்டு மத்திய பிரதேச பணி நிலைப் பிரிவில் இந்திய நிர்வாகப்பணி (IAS) அதிகாரியாகப் பணியாற்றினார். நேற்று ஓய்வு பெற்ற திரு ரபீந்திர பன்வாருக்கு பதிலாக இவர் பொறுப்பேற்றுள்ளார்.
  2. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் செயலராக திரு. கிரிதர் அரமான் இன்று மே 01ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை நாட்டுப்  பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்று அவர் கூறினார்.
  3. மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் செயலராக திரு. அரவிந்த்குமார் சர்மா இன்று மே 1ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார்.
  4. சென்னைக்கு கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ஜே. ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் ஜே. ராதாகிருஷ்ணனுக்குக் கீழ் ஐந்து ஐபிஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

_______________________________________________________________________

வர்த்தகம்

  1. அதானு சக்கரவர்த்தி தலைமையில் உயர்நிலைக் குழு

  • கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது குறித்துஆய்வு செய்ய மத்திய பொருளாதார விவகாரத் துறை செயலாளர் அதானு சக்கரவர்த்தி தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்த குழு நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடியிடம் தனது பரிந்துரைகளை வழங்கியது. அதில், அடுத்த 5 ஆண்டுகளில்111 டிரில்லியன் டாலர் முதலீடுதேவை என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.

2. உலக தங்க கவுன்சில்

  • நாடு தழுவிய அளவில் ஊரடங்கு அமல்படுத்தியதன் விளைவாக ஜனவரி முதல் மாா்ச் வரையிலான மூன்று மாத காலத்தில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 36 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
  • பொருளதார நிச்சயமற்ற சூழல், விலையில் காணப்பட்ட ஏற்ற இறக்கம், தேசிய ஊரடங்கு ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் தேவை அளவின் அடிப்படையில் நடப்பாண்டின் ஜனவரி முதல் மாா்ச் வரையிலான முதல் காலாண்டில் 36 சதவீதம் சரிவடைந்து 101.9 டன் ஆனது.
PDF Download Here

Leave a Comment