6th May 2020 Current Affairs in Tamil

6th May 2020 Current Affairs in Tamil

6th May 2020 Current Affairs in Tamil – Today Current affairs PDF link available below.

Dear Aspirants, we (Vetripadi.com team) have come with Daily Current affairs analysis. It is prepared to crack the various competitive exams. We are here to make sure your preparation easy. We will update the current affairs every day. It will help for both preliminary and mains (facts oriented with background information) for your preparation. We need you support.

VETRIPADI Daily Newsletter

வெற்றிப்படி.காம் | வெற்றிக்கு நீ படி!!!

Daily Current affairs for Competitive

Exams ( UPSC, TNPSC, SSC)

6th May 2020

TABLE OF CONTENTS

  1. தமிழ்நாடு

  2. இந்தியா

  3. வர்த்தகம்

  4. உலகம்

இந்தியா

  1. இந்தியர்களை அழைத்து வர முதல்கட்டமாக 3 கப்பல்கள்மாலத்தீவுக்கும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் புறப்பட்டன.
  • ஏர் இந்தியா விமானங்கள்மூலம் அழைத்துவரப்பட உள்ளன.
  • மும்பை கடற்கரையிலிருந்து ஐஎன்எஸ் ஜலஸ்வா, ஐஎன்எஸ் மாகர் ஆகிய இரு கப்பல்கள் மாலத்தீவுக்கும்,
  • ஐஎன்எஸ் ஷர்துல் துபாய்க்கும் அனுப்பப்பட்டிருப்பதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று கப்பல்களும் இந்தியர்களை அழைத்துக்கொண்டு கொச்சி திரும்பும்.

  • இதில் ஐஎன்எஸ் மாகர், ஷர்துல் ஆகிய இரு கப்பல்களும் தென்கடலோரப் படையைச் சேர்ந்தவை.
  • ஜலஸ்வா கிழக்கு கடற்கடைப் படையைச் சேர்ந்தவை.
  1. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் சட்டவரம்புஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட சஞ்சய் கோத்தாரி, மத்திய பணியாளர் நலன் பொது மக்கள் குறை தீர்ப்பு, ஓய்வூதியம் மற்றும் பிரதமர் அலுவலகம் ஆகிய துறைகளுக்கான இணையமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங்கை கோத்தாரி சந்தித்தார்.
  2. கடன் வசூல் தீர்ப்பாயத்தில் 24 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில்முதன்முறையாக காணொலி மூலம் தீர்ப்பு
  • தென்னிந்தியாவில் முதன்முறையாக சென்னை கடன் வசூல் தீர்ப்பாயத்தில் கடந்த 24 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரு வழக்கில் காணொலி காட்சி மூலமாக நீதிபதி டாக்டர் என்.வி.பத்ரிநாத் தீர்ப்பளித்துள் ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • சென்னை கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின்கீழ் உள்ள சென்னை, மதுரை, கோவை, எர்ணாகுளம் மற்றும் பெங்களூரு ஆகிய கடன்வசூல் தீர்ப்பாயங்களில் மே 4 முதல் காணொலி காட்சிமூலமாக வழக்குகள் விசாரிக்கப் பட்டு வருகின்றன.

உலகம்

  1. கரோனா வைரஸைத் தாக்கி, செயலிழக்கச்செய்யும் மோனோகுளோனல் நியூஸ்ட்ரலைஸிங் ஆன்டிபாடி இஸ்ரேல் உயிரி ஆய்வு அமைப்பு (ஐஐபிஆர்) கண்டுபிடித்துள்ளது.
  • கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடி கோவிட்-19 நோயைப் பரப்பும் காரணமான வைரஸை இந்த நோய் எதிர்ப்பு சக்தி செயலிழக்கச் செய்யும்.
  • மோனோகுளோனல் ஆன்டிபாடி என்பது, ஓரின நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்ட பி வகை வெள்ளையணுக்களாகும்.
  1. இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியைத் தோற்கடித்த 75-வது ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் வடகொரியாவில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்ட நினைவிடத்தைப் பாதுகாத்து வருவதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விருது வழங்கினார்.
  2. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் பெரிய மாவட்டமானது தர்பார்கர், இது இந்து மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக விளங்கி வருகிறது.

இப்பகுதியைச் சேர்ந்த இந்து இளைஞரான ராகுல் தேவ், தற்போது பாகிஸ்தான் விமானப்படையில் பைலட்டாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் விமானப்படையின் விமானியாவது இதுவே முதல் முறையாகும்.

முன்னதாக கடந்த 2016ஆம் ஆண்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த சீக்கிய ரேஞ்சர் அமர்ஜீத் சிங், முதல் முறையாக வாகா எல்லையில் நடந்த பாரம்பரிய விழாவில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. சோமோலங்மா சிகரம்

சோமோலங்மா என்று அழைக்கப்படும் மலைச் சிகரத்தின் வட பகுதியில், சீனாவில் கண்டகாலநிலைச் சூழலில் பனிப்பாறை உருவாகும் மையம் அமைந்துள்ளது.

இதில், ‘ரொங்பூ பனிப்பாறை சோமோலங்மா மலையின் அடியில் இருந்து 5300 மீட்டர் முதல் 6300 மீட்டர் வரையான உயரத்தில் அமைந்துள்ளது.

பெரிய பிரமிட் போல காணப்படும் சோமோலங்மா மலை, சீனாவில் மிக அழகிய பனிப்பாறைகளில் முதலிடம் வகிக்கிறது.

  1. உலகப் பேரழிவாக அறிவிக்கப்பட்ட கரோனா தொற்று 11 நாடுகளில் மட்டும் தலைகாட்டவில்லை.

அவைகளாவன: வடகொரியா, துர்க்மெனிஸ்தான், சாலமோன் தீவுகள், வானுவட்டு, கிரிபட்டி, மைக்ரோனேசியாவின் கூட்டாட்சி நாடுகள், நௌரு, நியுவே, பலாவு, சமோவா, டோங்கா ஆகிய நாடுகளில் இதுவரை கரோனா தொற்றுப் பரவல் ஏற்படவேயில்லை.

  1. இங்கிலாந்தின் கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகம் மற்றும் ராணி எலிசபெத் ஆஸ்பத்திரி பவுண்டேசன் டிரஸ்ட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் இணைந்து 20 ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எந்த குறைபாடு காரணமாக இறந்தார்கள்? என்பதை ஒப்பீடு செய்து அண்மையில் ஓர் ஆய்வை நடத்தினர்.
  • கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வைட்டமின்-டி சத்து கூடுதலாக கிடைத்தால் அவர்கள் வேகமாக குணம் அடைவதற்கு வாய்ப்பு அதிகம்.
  • ஏனென்றால் இந்த சத்து குறைபாடு காரணமாகத்தான் இவர்களை கொரோனா எளிதாக தாக்கி உள்ளது.
  • இறந்தவர்களில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வைட்டமின்-டி மிகவும் குறைவாக கொண்டிருந்தவர்கள்தான் என்றனர்.

வைட்டமின்-டி சத்து எவற்றில் இருந்து அதிகம் கிடைக்கிறது?

  • இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின்-டி மனிதர்களுக்கு நிறைய கிடைக்கிறது.
  • மீன்களில் சூரை, காலா, கானாங் கெழுத்தி, சங்கரா ஆகியவற்றில் வைட்டமின்-டி உள்ளது. குறிப்பாக காலாவில் அதிகம்.
  • ஆரஞ்சு பழச்சாறு, தானிய வகைகள், சோயா பால், பாலாடைக்கட்டி, காளான், முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றிலும் வைட்டமின்-டி தாராளமாக கிடைக்கிறது.

கொரோனாவின் தாக்குதலில் இருந்து தப்பிக்க பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, முக கவசம் அணிவது, அவ்வப்போது சோப்பால் கை கழுவது போன்றவற்றுடன் வைட்டமின்-டியும் நல்ல ஆயுதமாகத்தான் தெரிகிறது.

வர்த்தகம்

  1. வரும் ஜூன் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 20 சதவீதம் அளவுக்கு பின்னடைவு ஏற்படும் என இக்ரா தெரிவித்துள்ளது.
  • மேலும், நீண்ட கால நோக்கில் நிலைமை சீராகும்போது நடப்பு 2020-21 நிதியாண்டில் ஜிடிபி 1- 2 சதவீதம் வரையில் சரிவைக் காணும்.
  • தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமங்கள் இருக்க சாத்தியக்கூறுகள் இருப்பது, தயாரிப்பு, கட்டுமானம், வர்த்தகம், ஹோட்டல், போக்குவரத்து போன்ற துறைகளின் வளர்ச்சியை குறைக்கும் என இக்ரா தெரிவித்துள்ளது.

PDF Download Here

 

 

Tags :

current affairs tamil,current affairs tamil 2020,current affairs tamil meaning,current affairs tamil nadu,current affairs tamil winmeen,current affairs tamil january 2020,current affairs tamil quiz,current affairs tamil download,current affairs tamil nadu 2019,current affairs tamil pdf 2019,tamil current affairs 2020,tamil current affairs pdf,tamil current affairs quiz,tamil current affairs january 2020,tamil current affairs telegram group link,tamil current affairs today,tamil current affairs tnpsc,tamil current affairs book,tamil current affairs whatsapp group,tamil current affairs pdf download,current affairs of india,current affairs 2020,current affairs quiz,current affairs questions,current affairs 2019,current affairs january 2020,current affairs today,current affairs february 2020,current affairs for kids,current affairs 2020 in English,current affairs today,current affairs talent,current affairs topics,current affairs today in hindi,current affairs tamil,current affairs telugu,current affairs test,current affairs topics 2020,current affairs this week,current affairs test series,

Leave a Comment